dinamalar telegram
Advertisement

ஹரியானாவில் கூட்டணி தொடருமா? மோடியுடன் துஷ்யந்த் சந்திப்பு!

Share
புதுடில்லி :விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஹரியானாவில் உள்ள பா.ஜ., கூட்டணி அரசில் இருந்து, ஜனநாயக் ஜனதா கட்சி விலகலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான, துஷ்யந்த் சவுதாலா, பிரதமர், நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார்.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. பெரும்பான்மைக்கு, 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 2019ல் நடந்த தேர்தலில் பா.ஜ., 40 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியான, ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக் ஜனதா கட்சி, 10 இடங்களில் வென்றது.வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், உ.பி., விவசாயிகள், டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஹரியானா விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
'விவசாயிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணியில் இருந்து விலகலாம்' என, ஜே.ஜே.பி.,யைச் சேர்ந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.அந்த உத்தரவு வெளியான நிலையில், கட்சி, எம்.எல்.ஏ.,க்களுடன், துஷ்யந்த் பேச்சு நடத்தினார். பின்னர், முதல்வர், மனோகர் லால் கட்டாருடன், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷாவை சந்தித்து பேசினார்.இதையடுத்து, அவர் பிரதமர், மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதில் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மிகக் குறிப்பாக, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டணி அரசில் இருந்து, ஜே.ஜே.பி., விலகலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துஉள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • Svs yaadum oore - chennai,இந்தியா

  இவன் எங்கிருந்து வந்தான் இந்த தமிழன் ....பின்தங்கியவன் எல்லாம் முன்னேறிட்டான் என்று சொல்லி இங்கு திராவிட சித்தாந்த வியாதிகள் கூவி கூவி வோட்டு கேட்கிறான் ...இவன் என்னடான்னா இன்னும் படிக்கவே இல்லையாம் ...கோவில் கருவறை போக கூடாதுனு எவன் சொன்னான் ...இது இத்தனை வருடமா ஆளும் திராவிட சித்தாந்தத்துக்கே பெருத்த அவமானம் ....இவனை இழுத்துகிட்டு போய் படிக்க வைங்கய்யா ..பெரிய தொல்லையா இருக்குது ....இவன்தான் தமிழ் நாடு எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலம்னு எழுதினான் ..இப்ப வேற வழியில்லைன்னு பிளாட்டை திருப்பி போடுறான்...எல்லாம் ஏமாத்து வேலை போலிகள் .....

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள். அதனால்தான் இத்தனை நாட்கள் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது. உண்மையான விவசாயீ என்றால் விவசாய வேலை இருக்காது? மேலும் போராடுபவர்களில் மனைவி மற்றும் பிள்ளைகள் வார விடுமுறையில் பிக்னிக் மாதிரி போராட்ட இடத்துக்கு வந்து போவதும் நடக்கிறது. ஆக போராட்டம் நடத்துவது சிறு/குறு விவசாயிகள் அல்ல. பணக்கார விவசாயிகள். இவர்களுக்கு இரண்டாவது தொழில் விவசாயம். முதல் தொழில் இடைத்தரகு.

 • Raja - chennai,இந்தியா

  எங்க மோடிஜிக்கு வாரிசு அரசியல் பிடிக்காது. அதனால் இவர் ஆதரவை புறக்கணித்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திப்பார்.ஓ அது எதிர் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் இல்லையா.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   தற்போதுள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு முடிவில்லா விட்டால் ஹரியானா ஸ்வாஹா ..

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஏன் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டும் போராடுகிறார்கள், ஏன் மற்ற மாநிலத்து விவசாயிகள் போராடவில்லை, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மட்டும் விவசாயம் நடைபெறுகிறதா என்று ராசாவும், மாலிக் ராசாவும் அறிவு குறைந்த எனக்கு சொல்லி புரிய வைக்கவும்.

  • Raja - chennai,இந்தியா

   சொந்த பேரில் கருத்து பதிவிடாத கொக்கி குமாரு, நான் விவசாயிகள் போராட்டத்தை பத்தி பதிவிடவில்லை. வாரிசு அரசியலை பற்றிய பிஜேபியின் இரட்டை நிலைப்பாட்டை பற்றி தான் பதிவிட்டுள்ளேன். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள். விவசாயிகள் போராட்டத்தில் எப்படி அரசியல் உள்ளதோ அதை போலவே அந்த சட்டம் அமல்படுத்த பட்டதிலும் அரசியல் உள்ளது. இந்த சட்டத்தில் உள்ள நன்மை தீமைகளை உண்மையான விவசாயிகள் சீர்தூக்கி பார்த்து முடிவு செய்வார்கள். நான் விவசாயி அல்ல.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஹி...ஹி ...ஹி...தாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். திருட்டு திமுகவில் இருக்கும் 95 சதவீத வாரிசு அரசியலை பற்றி வாய் திறந்து கேள்விகள் கேட்டுவிட்டு ஆற அமர்ந்து உட்கார்ந்து 3000 கிலோமீட்டர்கள் தாண்டி உள்ள வாரிசு அரசியலை பற்றி மோடிஜியிடம் கேள்விகள் கேட்கலாம். பை தி பை என் உண்மையான பெயர் குமார். செல்ல பெயர் கொக்கி குமாரு. சங்கி அல்ல (இதை சொல்லாவிட்டால் அதற்கும் ஏதாவது சொல்வீர்கள்). ஒரு நடுநிலை இந்து.

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   கொக்கி அது என்ன சங்கி அல்ல. நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஹி...ஹி...ஹி...@ தமிழன்: தங்களை போன்றவர்கள் ஒரு பாவப்பட்ட சமூகமான பிராமணர்களை கிண்டல் அடித்துக்கொண்டே இருப்பீர்கள் அல்லவா. அந்த சமூகத்தில் நான் இல்லை என்று சொல்ல வந்தேன். எனக்கு சமஸ்கிருதமும் தெரியாது. எங்கள் சமூகத்தை யாராவது இப்படி தேவையில்லாமல் கேலி, கிண்டல் செய்துகொண்டு இருந்தால் பிராமணர்களை போன்று நாங்கள் ஒதுங்கி செல்ல மாட்டோம். கவனிக்கும் விதத்தில் கவனிப்போம். இப்போது கண்டு பிடித்து கொள்ளவும். மற்றபடி நான் ஒரு நடுநிலை இந்து. அரசியலுக்காக தேவையில்லாமல் இந்துமதத்தை யாரேனும் கேலி செய்தால், தேவையற்ற குற்றசாட்டுகளை அடுக்கினால் ஒரு சராசரி நடுநிலை இந்துவுக்கு வரும் கோபம் எனக்கு வரும். திருட்டு திமுகவில் உள்ள சூடு, சுரணை, மானம், ரோஷம் அற்ற இந்துக்கள் போல் இல்லை நான். ஹி...ஹி...ஹி...பதிலில் கண்டுபிடித்துவிட்டீர்களா?

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   ஒரு தமிழன் அரபு நாட்டில் பிழைக்க போனால் உங்கள் பாஷையில் அவன் வந்தேறி. எங்கிருந்தோ வந்தேறியாய் வந்து என் தமிழ் நாட்டில் மணியாட்டி பிழைத்து என்னையே அடிமையாக்க நினைத்தால் ??? உங்கள் வழித்தோன்றல்கள் என்றும் அடிமையாய் இருக்கட்டும் அது உங்கள் விருப்பம். ஆனால் என்னை என் தமிழ் சமூகத்தை யாரும் அடிமை படுத்த நாங்கள் விட மாட்டோம் .. உங்களுக்கு புரியும் நீங்கள் தமிழனாய் இருந்தால்? உங்களால் கோவில் கருவறை போக முடியுமா ? எந்த விதத்தில் நீங்கள் பிறப்பினால் கடவுளிடம் தரம் தாழ்ந்து விட்டீர்கள்..? பதில் தர முடியுமா? ஒரு சாரார் மட்டுமே கல்வியறியு பெறவேண்டும் என்பது எந்த நியதி? ஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு? மனிதனாய் பிறந்தால் தன்மானம் வேண்டும்... அது இல்லாமல் யாரும் தமிழனென்று சொல்ல கூடாது

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   நடுநிலை இந்து என்று சொல்பவர் ஏன் அடுத்த மதங்களை ஏளனம் செய்கின்றீர்கள்? நம் மதத்தில் உள்ள சமூக நீதி பற்றி என்றாவது பேசி இருக்குறீர்களா?. எல்லாருக்கும் கல்வி கிடைத்து விட்டதா ? ஏன் நம்மில் ஒரு சமூகம் மிகவும் பின்தங்கி இருக்கின்றது? காரணம்? மனிதன் எல்லாரும் சமமா பிறப்பில்? நான் கருவறை வரை ஏன் போக கூடாது என் நாட்டில்? அப்படி கடவுள் சொன்னால் அது கடவுளா ?

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   முக்கியமான ஒன்று, நீங்கள் சொல்லும் தாழ்ந்த சமூகத்தான் இல்லை நான். ஆனால் அவர்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. யாரைவிடவும் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை . நான் தமிழன்.. எனக்கு எல்லாரும் சமம் தமிழனை சமமாக நினைக்கும்வரை ...

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   கொக்கி குமார் ஐயா,,, நேர்மையான மனதுடன் ஆரோக்கியமான வார்த்தைகளால் பதில் தரவும் ...

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   கோவில் கருவறையில் பிராமணர்கள் தவிர யாரும் செல்ல ( நான் ஒரு இந்து, நான் உட்பட ) தகுதி இல்லை என்றும் அதற்குரிய காரணங்கள் என்ன என்று பக்கம் பக்கமாக எனது பழைய பதிவில் எழுதி இருக்கிறேன். சற்று சிரமம் பார்க்காமல் சென்று படித்து கொள்ளவும். அடுத்த மதத்தை நான் இழிவு செய்வதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் எனது இந்து மதத்தை தேவையில்லாமல் மற்ற மதத்தினர் கேலி, கிண்டல் செய்வதும், அரசியலுக்கு எங்களை பயன்படுத்திக்கொள்வதும் சமயங்களில் எங்களை அதிகம் கோபப்பட வைக்கிறது. உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று சொல்லும் போலி பகுத்தறிவாளன் சொரியார் ராம்சாமியின் பெரியாரிஸ்டுகளுடன் முஸ்லீம் தலைவர்களுக்கும், கிறிஸ்துவ தலைவர்களுக்கும் என்ன வேலை? அவர்களுடன் சேர்ந்து எனது இந்து மதத்தை கேலி கிண்டல் செய்கிறார்கள், அதனை பிற மத தலைவர்கள் வேடிக்கை பார்த்து கை தட்டி சிரிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பாதிரியார் சுடலையுடன் சேர்ந்துகொண்டு இந்து என்றால் பற்றி கொண்டு வருகிறது என்கிறார். எனக்கு கோபம் வருமா வராதா? இந்து மதம் காண்டாமிருகம் வைத்துள்ள கொம்பு போல. தேவை இல்லாமல் அது பயன்படுத்தாது. ரொம்ப சாதுவான மிருகம் அது. ஆனால், யாராவது தொல்லை கொடுத்தால் கொம்பை பயன்படுத்தும். அதுபோல நானும்,எனது இந்து மதமும்.

 • Rajasekaran - Chennai,இந்தியா

  எல்லா இடங்களிலும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் முழு மூச்சுடன் செயல் படும் மத்திய அரசு, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை மட்டும் அவர்களின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாதா? அரசுடமை வங்கிகளின் மூலமாக, விவசாயிகளின் தேவைகளை எப்படி இந்த இடைத்தரகர்கள் நிறைவேற்றுகிறார்களோ அதை விட சகாயமாக நிறைவேற்றினால் இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர இயலும் என்று தோன்றுகிறது. இதற்கான சிறப்பு அறிவிப்புகளை இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பார் என்று நம்பலாம் .

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பஞ்சாப் இடைத்தரகர்களின் பணம் பாதாளம் வரையில் பாய்கிறதே

  • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

   வேறு சிலர் எதிர் குரல் தருகிறார்களே அங்கே யார் பணம் பாய்ந்துள்ளது?

Advertisement