dinamalar telegram
Advertisement

தடுப்பூசி குறித்த வதந்திகள் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Share
Tamil News
திருச்சி:''கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட, 5 லட்சத்து 36 ஆயிரத்து, 500 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள், சென்னை வந்தன. அங்கிருந்து, மற்ற சுகாதார மண்டலங்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பெரம்பலுார், அரியலுார், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய சுகாதார மாவட்டங்களுக்கு, 68 ஆயிரத்து, 800 தடுப்பூசி மருந்துகள் திருச்சி வந்துள்ளன.

நேற்று, திருச்சியில் இருந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசி மருந்துகளை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், முதல் கட்டமாக, 307 இடங்களில், 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு, 100 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவுடன் நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடும் என்று எண்ணிவிடக் கூடாது.

தடுப்பூசி முதல் டோஸ் போட்ட, 28வது நாளில், 2வது டோஸ் போட வேண்டும். தொடர்ந்து, 2 டோஸ் தடுப்பூசி போட்டு, 42 நாட்களுக்கு பிறகே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவசியம் ஏற்பட்டால், நம்பிக்கையூட்டுவதற்கு, அதற்கான அனுமதி பெற்று, நானே போட்டுக் கொள்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

சரக்கு அடிக்காதீங்கஅமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பொதுவாக எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் மது அருந்தக்கூாடது.இது தடுப்பூசி, ஆகையால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், அடுத்து வரும் 42 நாட்களுக்கு மது அருந்தவே கூடாது.அப்படி மது அருந்தினால் தடுப்பூசியால் பயன் இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாதுஎன்றார்.

இரு முறைப்போடப்படும்.கொரோனா தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினமண போடப்பட்டு 14 நாட்களுக்கு பின் அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பு மிக்கவை என மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6 + 37)

 • vbs manian - hyderabad,இந்தியா

  அனுமதி பெறாமலே போட்டுக்கொள்ளலாம்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இந்த வதந்திகளை தடுக்க முதலில் அரசியல்வாதிகள் (மந்திரிகள், எம்பி., எம்எல்ஏ கள்) தடுப்பூசியை போட்டுக் கொண்டு முன்மாதிரியாக திகழலாமே - வெளிநாட்டு தலைவர்கள் மாதிரி. இருந்தாலும் உயிர் பயம் இருக்கத்தானே செய்யும் - பல லட்சம் கோடியில் சொத்துக்கள் இருக்கையில்.

  • Srinivas - Chennai,இந்தியா

   தடுப்பு ஊசி போட்டுகொண்டு சரக்கு அடிக்கக்கூடாது....குட்கா போடணும்னு சொல்றாரு....

  • enkeyem - sathy,இந்தியா

   கஞ்சா அடிக்கனுமுனு சொல்லலியா

 • Elango - Kovai,இந்தியா

  முதல் ஊசியை முதல்வர் திரு எடப்பாடியும், இரண்டாம் ஊசியை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களும் போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கலாம்....

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  நாம் தமிழர்கள் தான் தடுப்பு மருந்து பத்தி பேசுறாங்க ஆனா அவங்களே அதிமுகவின் B டீம் ஒன்னும் செய்ய முடியாது

Home தடுப்பூசி போட்டு கொண்டு மது அருந்தக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் (37)

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  அப்போ தமிழ்நாட்டில் பாதி பேர் தடுப்பொஸ்ஸி போட்டு கொள்ள மாட்டார்கள். நீங்களும் டாஸ்மாக் ஐ ரெண்டு மாசத்துக்கு மூட மாட்டீர்கள்.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  குடிகாரங்க, அதாவது நம்ம மது அருந்தும் தோழர்கள்/தோழிகள் இப்படி பேசிக்கிறாங்க - "மது அருந்துபவர்களை இந்த வைரஸ் ஒன்னும் செய்யாது என்றும், மேலும் அவர்களுக்கு இந்த வாக்சின் எதுவும் வேண்டாம் என்றும்" - உண்மையா?

 • ஆப்பு -

  பொங்கல் தொகுப்பே ஊசி போட்டுக்கிட்டாதான் குடுப்போம்னு சொல்லியிருக்கலாமே...

 • சம்பத் குமார் -

  1). இந்த பூமியில் மனித இனம் தோன்றியதிலிருந்து பாரத தேசத்தை இறைவன் பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரீக பாதைக்கு அழைத்துச் சென்றார்.2). அதனால் நாம் நல்ல ஞானம் பெற்றோம். எல்லா உயிர்களையும் நாம்‌ தன்னுயிர் போல் பேணிக் காக்கும் சக்தியை பெற்றோம்.3). தற்பொழுது கொரோனா வைரஸ்யை எதிர்க்கும் மருந்தினை கண்டுபிடித்து உபயோகிக்க உள்ளோம்.4). ஆனால் மனிதன் படு கேவலமாக எழுதும் கருத்துக்கள் மனதில் சிறுது கனமான வழியை ஏற்படுத்துகிறது.5). இறைவன்‌ அவர்கள் செய்யும் இந்த karmaவிற்கு உண்டான பலன்களை கொடுப்பார் என்று சனீஸ்வரனை கேட்டு கொள்கிறேன். நன்றி ஐயா.

 • ஆப்பு -

  அப்போ டாஸ்மாக் பொருளாதாரம் அம்போ..

 • Naduvar - Toronto,கனடா

  இவர் உண்மையாவே டாக்டர் தானா ? இங்க அந்தமாதிரி எந்த கட்டுபாடும் இல்லையே...இவருக்கு யாரு சொன்னாங்க? அப்புறம் இத கூட கொடிச்சாச்சு ஆரம்பிக்கறாங்க...மாணக்கெடு

 • Vittalanand -

  தடுப்பூசி அநைவருக்கும் இலவசம் எனில் அநைவருக்கும் அழியாத மை வைத்து போடவேண்டியது தானே. ரேஷன் கார்டு அடிப்படையில் வெள்ளை கார்டு தவிர்த்து மற்றெல்லா கார்டு தரருக்கும் போடுவார்கள். பொங்கல் பரிசு கூட இப்படித்தான் மறுத்தார்கள்.

 • RajanRajan - kerala,இந்தியா

  நாட்டுலே குட்கா சாராயம் பான்பராக் போதை சாக்லேட் என பல அம்சங்கள் இருக்கிறப்போ எப்படி இந்த தடுப்பூசி வேலை செய்யும்னு. அதனாலே திராவிட அரசுகள் ஒண்ணா சேர்ந்து இந்த வஸ்துக்களுடன் பலனளிக்கும் தடுப்பூசி கண்டு பிடிங்க அள்ளுங்க கட்டிங்க கமிஷனை. மாத்தியோசிங்கப்பா டாக்ட்டர்னா என்ன சும்மாவா.

 • Sri Ra - Chennnai,இந்தியா

  அப்ப அந்த ஊசியை வேண்டாம் நாங்க எல்லாம் யாரு கொரோனாவுக்கே அல்வா கொடுத்தவங்கடா

 • ram -

  போச்சு ஊசி போட்டுக்க வரமாட்டாங்க, இல்லேன்னா தமிழ்நாட்டோட வருமானம் போச்சு.. தெரியாத்தனமா வாயே விட்டுட்டாப்ளே...

 • srinivasan - stockholm,சுவீடன்

  Internal sanitizer+ external sanitizer mix?

 • konanki - Chennai,இந்தியா

  இலவசமாக கிடைக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டு சொந்த காசு கொடுத்து தண்ணி அடிப்போம். யார் கிட்ட திராவிஷன்டா

 • konanki - Chennai,இந்தியா

  தடுப்பூசி வேண்டாம் போடா-டாஸமாக் திராவிஷன்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒருலட்சம் பேருக்கு தடுப்பூசி போடும்போது ஓரிரு பிரச்சனைகள் வரலாம் இதனை சில ஊடகங்கள் பெரிதாக்கலாம் அரசு கவனம் தேவை

 • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

  முதல் மூன்று மாதங்கள் மினிமம் டாக்டர்ஸ் நர்ஸ் மற்றும் எழுவது வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே தடுப்பூசி போடப்படும் .. எனவே டாஸ்மாக் கிற்கு உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை ..

 • srinivasan - stockholm,சுவீடன்

  TAMAC is the backbone of govt, vaccine is not. Drink safely. I @

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  குட்கா உபயோகப்படுத்தலாமா?

 • சம்பத் குமார் -

  1). மத்திய மாநில அரசுகள் FM Radio மற்றும் TVகளில் தடுப்பூசியின் பயன் மற்றும் அதை உபயோகிக்க எவ்வாறு தயார்படுத்தி கொள்ளுதல் ஊசி உபயோகிக்கும் காலகட்டத்தில் என்ன மாதிரியான உணவு பழக்கவழக்கங்கள் மேற்கொள்வது என்பதை சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.2). பொது இடங்கள்,TV channel மற்றும் social media ஆகியவற்றின் வாயிலாக தடுப்பு ஊசி சம்பந்தமாக தவறான செய்திகளை பரப்புவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் கொரோனா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி ஐயா.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  மது அருந்திவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது. அமைச்சர் அவர்கள் இந்த கருத்தையும் தெரிவித்துருக்கவேண்டும். இப்ப நாம் 'குடிகார சகோதரர்கள்/சகோதரிகள்' என்ன செய்வார்கள், மது அருந்திவிட்டு தடுப்பூசி போடு என்று கேட்பார்கள் தப்பு செய்துவிட்டீர்கள், அமைச்சர் அவர்களே.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  எந்த குடிகாரனாவது அமைச்சர் விஜயபாஸ்கரின் அறிவுரைக்கு செவி மடுப்பானா? சந்தேகம்தான் ஆகையால், அமைச்சர் அவர்களே, சில மாதங்களுக்கு, அதாவது இந்த தடுப்பூசி எல்லோருக்கும் போடும்வரை, அரசு மதுக்கடைகளை பூட்டிவைத்தால் என்ன?

  • madhavan rajan - trichy,இந்தியா

   பூட்டி வைத்தால் சைடு வழியாக வாங்கி குடிக்கும் மறத் தமிழனிடமா விளையாடுகிறீர்கள்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

   'மறத்தமிழன்' அல்ல, 'மதுத்தமிழன்'

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  தடுப்பூசி மது அருந்தியபின் எடுத்துக்கொள்வது பற்றி இவர் ஒன்றும் சொல்லவில்லை.

  • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

   தாத்தா வெவரம் தான் ..

  • chandran, pudhucherry - ,

   படிச்சவங்களுக்கு புரியும். டாஸ்மாக் ல மூழ்கி கிடக்கிறவங்கள பத்தி உனக்கேன் கவலை

 • raghu - nellai,இந்தியா

  அப்படின்னா கடையை பூட்டுங்க ஏ குடிக்க கூடாதுன்னு சொல்றியா ப்ரஊஊஊ

  • madhavan rajan - trichy,இந்தியா

   மது அருந்துபவர்களுக்கு தடுப்பூசியே வேண்டாம். அதுவே தடுப்பூசியைவிட நன்றாக வேலைசெய்யும். டாஸ்மாக்கில் அவ்வளவு கும்பல். யாருக்காவது கொரோனா தோற்று வந்ததாக செய்தி வந்ததா?

  • chandran, pudhucherry - ,

   குடி ராசா எத வேணா உட்டுத்தரலாம் ஆனா குடிய மட்டும் விடக்கூடாது. உன்ன நம்பி ஒரு கவர்மென்ட் இருக்குது

 • RajanRajan - kerala,இந்தியா

  அட போங்கப்பா, அரசின் டாஸ்மாக் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தடுப்பூசிய தடை பண்ணணும்னு திராவிட ஆர்பாட்டம் பண்ணுவோம்.

 • மும்பை நாநா -

  வியாபாரம் படுத்துடும் .... டாஸ்மாக் ல

  • madhavan rajan - trichy

   குடியைக் கெடுக்கும். உடல் நலத்தை கெடுக்கும் என்று அறிவித்தாலும் குடிக்கும் மக்கள் .. தடுப்பூசி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும் என்று உத்திரவாதம் கேக்கிறார்கள். இதைவிட அறிவுசார் மக்களை பார்க்கமுடியுமா?

 • Rengaraj - Madurai,இந்தியா

  மொத்தத்தில் ஒரு மண்டலம் மது கூடாது. சரிதான். ஆனால் 'குடி'மகன்கள் கேட்கவேண்டுமே? டாஸ்மாக் பக்கம் போகாமல் இருக்கமுடியுமா? அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு இந்த தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த தடுப்பூசி நம் சமுதாயத்துக்கு நல்லதுதான். அரசுக்கும் வெற்றிதான்.

 • siriyaar - avinashi,இந்தியா

  அப்ப அந்த 30 நாட்கள் டாஸ்மாக் மூடவேண்டும். தடுப்பூசி இலவசமாக கொடுத்தால் கூட மக்கள் போடுவது சந்தேகம் ஏனெனில் கோரோனா இந்தியர்களிடம் நன்பனாகி விட்டது, யாரையும் ஒன்னும் செய்யவில்லை மக்கள் அதை கண்டு பயப்படவில்லை தற்போது.

Advertisement