dinamalar telegram
Advertisement

மயிலாப்பூரில் போட்டி? கமல்ஹாசன் பேட்டி!

Share
Tamil News
கோவை:''மயிலாப்பூர் தொகுதியில், நான் போட்டியிடுவதாக கூறுவது, தகவலே,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் தெரிவித்தார்.

கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தேர்தல் பிரசாரம் செய்து வந்த கமல், நேற்று தொழில் துறைக்காக, ஏழு அம்ச கொள்கைகளை வெளியிட்டார்.

பின், அவர் அளித்த பேட்டி: கம்ப்யூட்டர், குடும்ப பெண்களுக்கு மாத சம்பளம் தருவது போன்றவை, இலவசங்கள் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடு. இலவசம் என எதுவும் சொல்லவில்லை. மாணவர்களுக்கு வழங்கும், 2 ஜி.பி., டேட்டாவில், கல்வி கற்க முடியுமா என்பது சந்தேகம்.


நாங்கள் ஜாதியை பார்க்க மாட்டோம்; சாதனையை தான் பார்ப்போம். சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக போட்டியிடுவேன்; மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறுவது தகவலே.
வேளாண் திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. இனியாவது, மத்திய அரசு, பேச்சை துவக்க வேண்டும். நண்பர் ரஜினி, வீட்டுச் சிறையில் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

யாரும் தொடக்கூடாதுகோவையில், கமல் தங்கியிருந்த ஓட்டல் அரங்கில், போட்டோ எடுக்கும் நிகழ்வு நடந்தது. போட்டோ எடுக்க விரும்பியவர்களுக்கு, கட்சி சார்பில், டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. டோக்கன் இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

'கமலை யாரும் தொடக்கூடாது; நெருங்கி நிற்கக் கூடாது; கை குலுக்கக்கூடாது' என, கட்சியினர் அறிவித்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் செலுத்திய கமல், யாருக்கும் கை நீட்டி விடக்கூடாது என்பதற்காக, இரு கரங்களையும் இறுக்க பிடித்துக் கொண்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

 • sankaseshan - mumbai,இந்தியா

  பிராமி ன்ஸ் ஒட்டு நிச்சயமாக கிடைக்காது .

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அப்படீன்னா ... அப்பூடியா .. அப்பண்ணா வெற்றி அந்த கட்சிக்கு உறுதி .. அது எந்த கட்சி . எப்பூடி ..

  • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

   ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கே .......

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  ஆண்டாள் பத்தி விக்டர் ஜேம்ஸ் பேசுனப்போ எங்கே இருந்தே ???? என்று அவர்கள் கேட்பார்கள் ........... பதில் """" அப்போ கோமாவுல இருந்தேன் """"

 • Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா

  அங்கு பிராமணர்கள் வீட்டில் சென்று நான் சுத்த பிராமினனன் வெளியில் ஒரு கூத்துக்காக திராவிடன் என்று வேஷம் போட்டு கடவுலை எதிர்ப்பது போல் ஒரு பாவால காட்டுகிறேன். நீங்கள் நம்பவேண்டாம் எனெக்கே உங்கள் வாக்குகளை போடுங்கள். என்று கூறுவார். இவர் அரசியலுக்கு பொருத்தமானவர்.

  • M.Selvam - Chennai/India,இந்தியா

   மத்த அரசியல் ஜந்துக்கள் மட்டும் வேஷங்கள் போட்டால் வாய் பிளந்து பின்னால் போவீங்க.. அப்பிடியே செய்யுங்க ..தப்பில்லை ..

 • Ramona - london,யுனைடெட் கிங்டம்

  சொல்லமுடியாது சில பகுத்தறிவு பசங்க கூஜா தூக்குவாங்க . இந்த உலக மகா நடிகன் கூட அப்படித்தான் சொல்லுவாரூ

  • M.Selvam - Chennai/India,இந்தியா

   இவரை விட இப்ப வாய்த்திருக்கும் தலைவர்கள் யாரும் பெரிய உயர்குணங்கள் உடையோர் இல்லை..வேறுவழியின்றி ஓட்டோ போடுகிறோம் என்பதுதானே உண்மை..??????????

  • Shekar - Mumbai,இந்தியா

   உயர்குணங்கள்?? இவனிடம்

Advertisement