dinamalar telegram
Advertisement

ஜெ., நினைவிடம் பிப்., 1ல் திறப்பு?

Share
Tamil News
சென்னை :ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை, பிப்ரவரி, 1ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டு உள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கு, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு, ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடம் புனரமைப்பு பணி, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இறுதி கட்ட பணியை, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் மூத்த அமைச்சர்கள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். நினைவிடம் திறப்பு விழாவுக்கு, பிரதமர் மோடியை அழைக்க, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். இதற்காக, வரும், 18ம் தேதி டில்லி சென்று, பிரதமரை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.

திறப்பு விழா நடத்த, 27ம் தேதி மட்டுமின்றி, பிப்., 1ம் தேதி, 2ம் தேதி, 9ம் தேதி ஆகிய, நான்கு நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஒப்புதலை பெற்று, திறப்பு விழா தேதி உறுதி செய்யப்பட உள்ளதாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  தங்களது ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்த போதே மறைந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மூவருக்கும் சென்னை மெரினாவில் நினைவிடம் இருப்பது சிறப்பு.

 • Murthy - Bangalore,இந்தியா

  நம்பர் ஒன் குற்றவாளிக்கு நினைவிடம் கட்டும் அரசு ......இதை விட ஒரு கேவலம் உண்டா?

  • Visu Iyer - chennai,இந்தியா

   அதானே.. இதை சட்டம் பார்த்துக் கொண்டா இருக்கும் என நினைக்கிறீர்கள்..

 • Visu Iyer - chennai,இந்தியா

  நீதி மன்ற குற்றவாளிக்கு மணி மண்டபம் கட்ட சட்டம் அனுமதிக்கிறத...

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   சரி விடுங்க, அவர் மீது இருந்தாவது வெறும் 100 கோடிகள் சொத்து சேர்த்த வழக்கு. ஆனால், அந்த வழக்கை போட்ட திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி ரத்த சொந்தங்களின் சொத்து மதிப்பு ஐம்பதாயிரம் கோடிகளை நெருங்குகிறது. அங்குதான் நிற்கிறார் திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி.

  • Ellamman - Chennai,இந்தியா

   ஜெயாவின் சொத்து வெறும் நூறு கொடிகளா?? ஜெயாவின் கடைசி அல்லக்கை ராஜேந்திர பாலாஜி வீட்டிலேயே இரண்டாயிரம் கோடிக்கு மேலே உள்ளது.. சம்பத்தில் மரணமடைந்த ஊர் பேர் தெரியாத அமைச்சர் வீட்டில் எத்தனை ஆயிரம் கொடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.. அதை வசூல் செய்ய சிறப்பு கவனிப்புகள் எல்லாம் நடந்ததே??

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   அது இருக்கட்டும், திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதியின் சொத்துக்களை விட அம்மாவின் சொத்துக்கள் குறைவா அதிகமா? கட்டுமரத்தின் சொத்துக்கள் அதிகம் என்றால் அது எப்படி வந்தது? உழைத்து சம்பாதித்தார்கள் என்று காதில் பூ சுற்ற வேண்டாம்.

  • Visu Iyer - chennai,இந்தியா

   தொகை எத்தனை என்பதல்ல.. அது எத்தனை கோடி யாக இருந்துட்டு போகட்டும்.. குற்றவாளி தானே.. அவருக்கு மணிமண்டபம் அரசு செலவில்.. அதுவும் பிரதமர் அழைப்பில்.. என்றால்.. நீதிக்கு தலை வணங்க வேண்டாமா... இது தவறான முன் உதாரணமாக போயிடும்..

 • Elango - Kovai,இந்தியா

  மோடிஜீ வராமல் தவிர்ப்பது நல்லது...

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்போகூட்டணி ? சீட்டு ?

  • Visu Iyer - chennai,இந்தியா

   மிஷன் இருக்கும் போது இவர்கள் பின்னால் எதற்கு ஒளியனும்...

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  தமிழக மக்களே, இவங்களாவது 80 கோடிகளில் முடிச்சுட்டாங்க. திருட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் சுடலை கட்டுமரம் கருணாநிதிக்கு 180 கோடிகளில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து எடுத்து நினைவிடம் கட்டுவார். பார்த்து கவனமா ஓட்டு போடுங்க. உங்கள் மனதிற்கு பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டுவிட வேண்டாம். பிறகு தற்போது மூன்றரை லட்சம் கோடிகளில் இருக்கும் தமிழகத்தின் கடன் ஆறரை லட்சம் கோடிகளில் கொண்டு விட்டுவிடுவார்கள். நமது சந்ததிகள், பேரன் பேத்திகள் தலையில் அந்த கடன் வந்து விழும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஒரு குற்றவாளிக்கு நினைவிடம் கட்டி இது உதாரணமாகிவிட்டது. இதைவைத்து, கட்டுமரத்திற்கும் கட்டுவானுவோ... எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத, நீங்களெல்லாம் முகத்தை எப்போதும்போல அங்கேயே வைத்துக்கொள்ள நேரிடும்......

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஹி...ஹி...ஹி...தாங்கள் சொல்வதுபோல அதிமுக, திமுக இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழல் காங்கிரஸ் கட்சியையும் தவிர்த்து பார்த்தால் மீதம் உள்ளது பாஜக மட்டுமே. அதற்கு ஓட்டு போடலாம் என்றால் என்னை சங்கி என்று சொல்வீர்கள். நான் என்ன செய்வது? ஹி...ஹி...ஹி...

Advertisement