dinamalar telegram
Advertisement

திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி!

Share
Tamil News
சென்னை : தமிழகத்தில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், 'பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டி நடைமுறைகளை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


@@தமிழகத்தில், 10 மாத இடைவெளிக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. வரும், 19ம் தேதி முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.


இந்நிலையில், கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மை கல்வி அதிகாரிகளால், நேற்று நடத்தப்பட்டது. இதில், பல்வேறு அறிவுரைகளும், வழிகாட்டி நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.


அதன் விபரம்:

* அனைத்து மாணவர்களும், முக கவசத்துடன் மட்டுமே வர வேண்டும்...
* பள்ளி வளாகத்தில் நுழையும் போது, கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின்பே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.


* மாணவர்களின் உடல் வெப்பநிலை, தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். காய்ச்சல் உள்ள மாணவர்களை அனுமதிக்கக் கூடாது
.

* பள்ளிகள், காலை முதல் மாலை வரை இயங்க வேண்டும். மதிய உணவு எடுத்து வர அனுமதி வேண்டும்.


* பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில், மரத்தடியில் பாதுகாப்பான சூழலில் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்
.

* அனைத்து மாணவர்களும், தங்களது பெற்றோரின் விருப்பம் பெற்ற பின்னரே, பள்ளிக்கு வர வேண்டும். அவர்களின் எழுத்துபூர்வமாக ஒப்புதல் கடிதம் எடுத்து வர வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை, பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது
.

* மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து, அச்சம் ஏற்படுத்தக் கூடாது. வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள், மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' நடத்தி, மனநல ஆலோசனை தர வேண்டும். அதன்பின்னரே, பாடம் நடத்த வேண்டும்
.

* வளாகங்களில் ஒன்றாக கூடுவது, விளையாடுவது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. மாலை, காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது
.

* அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்றுத் தரும், அனைத்து ஆசிரியர்களும், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பாடங்களை நடத்தினாலும், மற்ற ஆசிரியர்கள், பள்ளி சுமூகமாக இயங்க தேவையான பணிகளை பார்க்க வேண்டும்.இவ்வாறு, வழிகாட்டி நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மற்ற வகுப்புகள் திறப்பது எப்போது?
''தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பள்ளிகளை திறந்து, அதன் நிலையை ஆய்வு செய்த பின், மற்ற வகுப்புகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு மேற்கொள்வார்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோபியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வரும், 19 முதல், பள்ளிகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். இதற்காக, 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.மாணவர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி திரவம் வழங்குவது குறித்து, துறை ரீதியாக ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.முதல் கட்டமாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பள்ளியை திறக்கிறோம். வகுப்புகளின் நிலையை ஆய்வு செய்து, அதன்பின் படிப்படியாக மற்ற வகுப்புகளை திறப்பது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., முடிவு மேற்கொள்வார். சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், பொதுத்தேர்வு நடத்துவது குறித்த முடிவுகளை, தெளிவாக விளக்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • Routhiram Palagu - Chennai,இந்தியா

  Ellamae therandhachu school Martin enna?

 • தியாகராஜன் வெ -

  பள்ளிகளை இப்பொழுது திறப்பதற்கு அவசியம் இல்லை. இன்னும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியே போட ஆரம்பிக்கவில்லை. அதற்குள் குழந்தைகளை வைத்து விளையாட வேண்டாம்.

 • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

  இது மிகவும் தவறான முடிவு. முறைப்படி கல்வியாளர்கள் இதற்க்கு அனுமதி தரக்கூடாது. இப்படியொரு நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைச்சுமையை குறைக்கவேண்டும். CM EPS ஜி அவர்களுக்கு நான் முன்பே அவரது டுவிட்டர் அக்கவுண்டுக்கு, 4 பள்ளி நாட்கள் மாற்றத்திற்கு பரிந்துரை செய்திருந்தேன். புதன்கிழமை விடுப்புநாளாக அறிவித்து அன்று ONLINE / TV மூலம் வாழ்க்கைநெறி (LIVING VALUES) பாடங்களை பயிற்றுவிக்கலாம். திறமையாக செயல்பட கற்றுக்கொடுப்பதுதான் கடினமாக உழைப்பதைவிட மேல். இது அரசியல்வாதிகளுக்கு புரியாது.

 • Tamil - chennai,இந்தியா

  ஆன்லைன் வகுப்புகள் தொடரவேண்டும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளி செல்லட்டும், அனைவரயும் கட்டாயப்படுத்த கூடாது. பேருந்து ஆட்டோ மூலம் பரவினால் யார் பொறுப்பு பள்ளி நிறுவனம் மருத்துவ செலவுகளை ஏற்கவேண்டும். தடுப்பூசி போடுவதற்கு கட்டாயப்படுத்த வாய்ப்புகள் அதிகம்

 • vbs manian - hyderabad,இந்தியா

  கிருமி நாசினிக்கு கட்டணம் வசூலிப்பார்களா.

Advertisement