dinamalar telegram
Advertisement

இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு: மாஞ்சோலை எஸ்டேட்டில் பதிவு

Share
திருநெல்வேலி: கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு, திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் பதிவானது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி வெள்ளம் சென்றது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பகலிலும் தொடர்ந்து பெய்தது. அதிகபட்சமாக, பாபநாசம் அணைப் பகுதியில், 18.5 செ.மீ., மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில், 16.5 செ.மீ., பெய்தது.பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுதும், தாமிரபரணியில் திறக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மழைநீரும் சேர்ந்து, வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி நீர் சென்றது.
வழியோர கிராமங்களில் ஆலடியூர், காட்டுமன்னார்கோயில், வண்ணார்பேட்டை என நீர் புகுந்த இடங்களில், மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 12 சிறப்பு முகாம்களில், 300 பேர் தங்க வைக்கப் பட்டனர். தாமிரபரணி ஆற்றின் இருபுறமும், தற்போது பிசான நெல் பயிரிடப்பட்டுள்ளது. பல இடங்களில் வயல்களை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர், கோடகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்தை தரும், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது. மாஞ்சோலை, ஊத்து பகுதியில், 52 செ.மீ., மாஞ்சோலையில், 35 செ.மீ., நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில், 37 செ.மீ., மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவிலேயே இங்கு அதிக மழைப்பொழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தம்மேலும் தூத்துக்குடி கருங்குளம் அருகே உள்ள புளியங்குளம் சாலையில் வெள்ளம் வழிந்தோடுவதால் நெல்லை திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து தெய்வசெயல்புரம் வழியாக மாற்று வழியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்ட்டுள்ளது. ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் வாகனங்கள் ஆத்தூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களில் நிவாரண பணிகள்இதனிடையே தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி,நெல்லை, தென்காசிமாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ உதய குமார் மற்றும் எம்.எல்.ஏ.,ராஜலட்சுமிஆகியோர் மீட்புபணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் . மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் போர்கால அடிப்படையில்கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  பொதுவாக மழை பெய்தால் அந்த நீரானது குளம் குட்டை கண்மாய் ஊரணிகளுக்கு செல்லும்.. அதற்கேற்றபடி வரத்துவாரி வாய்க்கால்கள் இருந்தன... ஆனால் சில ஆண்டுகளாகவே..... இரு திராவிட கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் இன்னாள் பிரமுகர்கள்.... அந்த வரத்துவாரிகளை முற்றிலுமாக அடைத்துவிட்டனர்.... அப்போது தானே தண்ணீர் போகாது.... எத்தனை மழை பெய்தாலும் கண்மாய் நிரம்பாது..... விளைவு அந்த நீரானது குடியிருப்பு பகுதிக்கு செல்கிறது....பின்னர் அந்த நிலங்களை தாசில் தார் துணையோடு.... நீர்நிலை என்ற வகைப்பாட்டிலிருந்து மாற்றி ஆக்கிரமிப்பு செய்து பட்டா போட்டு விற்றுவிடுகின்றனர்....இருக்கிற நீர் நிலைகளை பாதுகாத்தாலேயே போதும்....

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஐம்பது வருஷம் ஆண்டபோதும் தண்ணீர் மேலாண்மையில் பூஜ்யம் .மழைவெள்ளம் காலங்களில் கடலில் சேர விடுவார்கள்

 • சம்பத் குமார் -

  1). நண்பர்களின் கருத்துடன் நான் ஒத்து போகிறேன்.2). அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறிய ஆறுகள் மற்றும் குறு ஓடைகள் அடிப்படையில் 50 to 75 சிறு டேம் கட்ட வேண்டும்.3). பெரிய டேம் இரண்டு மூன்று கட்ட வேண்டும்.4). காவிரி ஆற்றின் குறுக்கே செக் டேம் கட்டி நீரை இந்த சின்ன டேம்களுக்கு திருப்பி சேமித்து வைக்கலாம்.5). பொதுவாக இரண்டு திராவிட கட்சிகளும் நீர் மேலாண்மையில் பூஜ்யம் தான். அதில் சந்தேகமில்லை.6). தற்பொழுதையை இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.7).அரசு இதை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும்.8). கற்பனையில் நாம் பாலைவனத்தில் இருக்கிறோம் என நினைத்து, மழை காலத்தில் கிடைக்கும் ஒரு சொட்டு நீரையும் வீணடிக்காமல் அதை சேமிக்க வழிவகுக்க வேண்டும்.9). மூன்று மாவட்டங்களுக்கு ஒரு சீனியர் PWD இன்ஜினியர் மற்றும் ஒரு சீனியர் அக்ரி இன்ஜினியர் குழு அமைத்து அவர்களுக்கு ஒரு தலைமை அதிகாரி நியமித்து முதல்வரே விவசாயி என்பதால் விவசாய துறை அமைச்சராகவும் இருந்து போர்கால அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை செய்ய வேண்டும்.10). ஒரளவு ரோடு மற்றும் பாலங்கள் கட்டி விட்டோம் இனி இந்த நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். நன்றி ஐயா.

  • nagendirank - Letlhakane

   மிக சரி நீங்கள் நல்ல உபயோகமான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் ஆள்பவர்கள் அல்லது ஆள வருபவர்கள் உணர வேண்டும்

 • வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா

  திருநெல்வேலி ன்னாலே நெல்லையப்பரும் தாமிரபரணியும் அல்வாவும் அருவாளும் "ஏலேய்" யம் தான் கண்ணு முன்னாடி வருது..

 • Elango - Kovai,இந்தியா

  தாமிரபரணி கருமேனி நம்பியார் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது...

Advertisement