dinamalar telegram
Advertisement

வாட்ஸ்ஆப் பிரைவசி பிரச்னை: சம்மன் அனுப்ப பார்லி., குழு திட்டம்

Share
புது டில்லி: பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி கொண்டு வந்திருக்கும் புதிய தனியுரிமை கொள்கைகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், இது தொடர்பாக நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க பார்லிமென்ட் குழு தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த வாரம் புதிய பிரைவசி கொள்கைகளை அறிவித்தது. அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதை கட்டாயமாக்கியது. புதிய பிரைவசி கொள்கையின் படி வாட்ஸ்ஆப் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு வணிக நோக்கத்திற்காக பகிரப்படும். இதனால் வாட்ஸ்ஆப் அனைத்து உரையாடல்களையும் ஒட்டுக்கேட்குமோ என்ற அச்சம் எழுந்தது. உலகளவில் பல பயனர்கள் இதனை எதிர்த்தனர். இதனால் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறினர்.

அதன் பிறகு வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பதாக வாட்ஸ்ஆப் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் மூலம் உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை 100% தொடர்ந்து பாதுகாப்போம் என்று கூறியுள்ளது. “வாட்ஸ்ஆப் அல்லது பேஸ்புக்கால் உங்கள் தனிப்பட மெசேஜ்கள் அல்லது அழைப்புகளை பார்க்க முடியாது. அந்த தகவல்களை நாங்கள் சேமிப்பதில்லை. உங்கள் தொடர்புகளை பேஸ்புக்கிற்கு பகிர மாட்டோம். வாட்ஸ்ஆப் குழுக்களும் தனிப்பட்டதாகவே தொடரும். பகிரப்படும் இருப்பிடங்களையும் வாட்ஸ்ஆப் அல்லது பேஸ்புக்கால் பார்க்க முடியாது.” என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் காங்., எம்.பி., சசி தரூர் தலைமையிலான பார்லி., தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு வரும் வாரங்களில் பேஸ்புக் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைவசி பிரச்னை பற்றி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா "என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் என்றால் அதனை எப்படி வாட்ஸ்ஆப் வேறொருவருக்கு பகிர முடியும்" என்று கேட்டுள்ளார். அதே போல் டுவிட்டருக்கும் சம்மன் அனுப்ப உள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்ற தாக்குதலின் போது டிரம்பின் கணக்கை தன்னிச்சையாக முடக்கியது டுவிட்டர். அவர்கள் வெளியீட்டாளர்களா அல்லது நடுவர்களா என்று கேட்க விரும்புவதாக பா.ஜ.., எம்.பி., நிஷிகந்த் துபே மற்றும் காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முடிவு செய்துள்ளனர். நடுவர்கள் என்றால் ஒருவரின் கணக்கை எப்படி தன்னிச்சையாக முடக்க முடியும். நேற்று டிரம்புக்கு நடந்தது நாளை வேறு யாருக்கும் நடக்கும் என விவாதிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  ஜியோ கையில் ஆதார் கார்டு பிரைவசி ஆகாசத்தில் பறக்குது..

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இதே போன்று இங்கும் இரத்தம் சிந்தி வாங்கிய சொத்துக்களை அபகரிக்கும் கும்பலுக்கும் . நேர்மையாக வாழ்பவர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கூட்டங்களுக்கும் , எங்கும் எதிலும் நம்பிக்கை எந்த உத்திரவாதமும் இல்லாமல் நடுங்கிக்கொண்டு இருக்கும் இன்றய சூழலில் இந்த குழு வந்து நடவடிக்கை எடுத்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும், வாட்டசாப்பவாவது ஏதோ ஒரு செய்தி மற்றும் செய்திகள் பரிமாற்றம் மட்டுமே ஆனால் நிஜ வாழ்வில் எல்லாமே குறிப்பாக சமூக விரோதிகளுக்கு எல்லாமே தெரியும் வகையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது வந்தே மாதரம்

 • MANIAN K - Dubai ,இந்தியா

  திருடர்கள் கூட்டம் என்ன திட்டமிடுகிறார்கள்?

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  தானமா கிடைச்ச மாட்டின் பல்ல பாத்த கதைதான் இது , பிரியா கொடுக்குறவன் அவன் இஷ்டத்துக்குத்தான் கொடுப்பான்

 • kijan - Chennai,இந்தியா

  இந்த செய்தியால் அறிவது என்னவென்றால் .... சசிதரூர் மச்சக்காரன் .... இந்த பிரச்சனையைபற்றி மஹுவா மொய்த்ரா உடன் நல்ல விவாதிப்பான்

Advertisement