dinamalar telegram
Advertisement

இன்றைய கிரைம் ரவுண்ட்அப்

Share
புதுடில்லி: டில்லி, மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உலர் பழ விற்பனையில் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் மோகித் கோயல் கைது.


* பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான மேனேஜர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை .


* பீஹாரின் முசாபர்பூரில் 15 வயது மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


* மேற்கு வங்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


* பண மோசடி வழக்கில் திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., கே.டி.சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் நிகழ்வு !



* சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி தியேட்டர் மீது எம்ஜிஆர் நகர் போலீசார் கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


* பொய் புகார் மற்றும் மிரட்டல் மூலம் பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


* வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரில் 10 ஆண்டுகளாக படிக்காமல் மருத்துவம் பார்த்த ரமேஷ் என்பவர் கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


*சென்னை திருவல்லிக்கேணியில்,ஓசி சாப்பாடுக்கு ஓனரை மிரட்டிய பாஜ பிரமுகர் இருவர் கைது செய்யப்பட்டனர். மத கலவரம் தூண்டும் வகையில் பேசியதால் போலீசார் நடவடிக்கை

உலக நடப்பு !



* கனடாவில் கொரோனா ஊரடங்கை மீறி இரவு 9 மணிக்கு நடைபயிற்சி சென்ற தம்பதியினருக்கு தலா 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

*துருக்கி நாட்டை சேர்ந்த மத வழிப்பாட்டுத் தலைவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா

    என்ன தி மு கா வேலையை ப ஜா க்க வும் ஆரம்பித்து விட்டீர்களா. மக்களை முட்டாளாக்க பார்க்காதீர்கள். இப்போதே இப்படி என்றால் அப்பறம் சொல்வதற்கொன்றுமில்லை.

Advertisement