dinamalar telegram
Advertisement

ஆபாச வீடியோக்கள்: யுடியூப் சேனல்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு

Share
சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

பெசன்ட் நகர் கடற்கரை சென்ற பெண்களிடம், ஆபாசமாக கேள்வி கேட்டு, பதில் கூற மறுத்த பெண்களை துரத்தி சென்று படம்பிடித்து ஒளிபரப்பிய, 'சென்னை டாக்' யு டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய்பாபு, கேமரா மேன் அசேன்பாஷா ஆகியோரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த கேமரா, மைக், மூன்று மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், யுடியூப் சேனல்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விடுத்த எச்சரிக்கை: வரும் நாட்களில், யுடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . ஆபாசமான வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். யுடியூப் சேனல்களையும், அவற்றின் வீடியோக்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

  • M.P.Murugaiah - chennai,இந்தியா

    There are lots such videos which needs to be removed from you tube channel which are vulgar and obsence

  • Rajas - chennai,இந்தியா

    அந்த காலத்தில் போலீஸ் அடிக்கிற அடியில் தவறு செய்யவே பயப்படுவார்கள். ரோட்டில் அடித்து இழுத்து ஊர்வலமாக போவார்கள். அப்போது போலீஸ் அதிகாரிகளும் நேர்மையாக இருந்தார்கள். கட்சிக்காரர்கள் கூட போலீஸ் ஸ்டேஷன் போக பயப்படுவார்கள். அதிகாரிகள் நேர்மை தவறி நடந்தார்கள். மனித உரிமை கமிஷனும் வந்தது. அதன் பின் தப்பு செய்கிறவர்கள் மட்டுமே சந்தோசமாக இருக்கிறார்கள். மக்களும் லஞ்சம் வாங்குபவனை திறமைசாலி என்று கொண்டாடுகிறார்கள். நேர்மையானவன் இப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

  • Svs yaadum oore - chennai,இந்தியா

    //....ரௌடி பேபி சூரியா பேசும் ஆபாசப் பேச்சுக்கள் ....//....இவன் யார் இவன் பேபி சூரியா ??....இவனை போன்ற இந்த யுடியூப் சேனல் பல கோடி பார்வைகளாம் ...இது தான் தமிழர் திராவிடர் பண்பாடு ....இதில் கல்லா கட்டறவன் நிதி கம்பெனி .....

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    அறிவாலய துணை நடிகன் மேல எப்போ எசமான் நடவடிக்கை எடுப்பீங்க ?

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    Book under gundas act. They shouldn't come out. அப்போதுதான் மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்கும்

    மேலும் செய்திகள் :

Advertisement