dinamalar telegram
Advertisement

பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை தடை செய்த உகாண்டா!

Share
கம்பாலா: உகாண்டாவில் அதிபர் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா. அங்கு 1986 முதல் தேசிய எதிர்ப்பியக்கத்தின் தலைவர் யோவெரி முசெவெனி (76) அதிபராக உள்ளார். மக்களாட்சி குடியரசு நாடான அங்கு வியாழனன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய எதிர்கட்சித் தலைவர்களில் முசெவெனிக்கு கடும் போட்டி அளிப்பவராக பாபி வைன் உருவாகியுள்ளார். 38 வயதாகும் பாபி வைன் பிரபல பாப் பாடகராக இருந்து அரசியல்வாதியானவர். அந்நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள். சராசரியாக 30 வயதுக்குள்ளானவர்கள். அவர்களில் பெரும் கூட்டம் 'புதிய உகாண்டா' என்ற பிரசாரத்துடன் பாபியை பின்தொடர்கிறது.
இந்நிலையில் இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் மறு உத்தரவு வரும் வரை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் அனைத்தையும் தடை செய்யும் படி கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவான சில பக்கங்களை பேஸ்புக் முடக்கியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கணக்குகளை தான் அகற்றியதாக பேஸ்புக் கூறியுள்ளது.
அந்நாட்டில் பெரும்பாலான ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் அரசு ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை. முக்கிய தினசரி அரசால் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் பல ஊடகங்கள் தங்கள் பிரசாரத்தை ஒளிபரப்புவதில்லை என்கிறார். இதனால் அவர் தனது பிரச்சாரங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பி வந்தார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை தடுக்கும் விதமாக சமூக ஊடகங்களுக்கு தேர்தலுக்கு இரு நாள் முன்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

  ஜனாதிபதி முசவெனி அவர்கள் ஒரு சர்வாதிகாரியாக தன் ஆதிக்கத்தை தொடங்கினாலும் ஒரு சிறந்த DELIVERING லீடராக செயல்பட்டார். சிறந்த அறிவாளி, தன் பக்கத்துக்கு நாடுகளும் நன்றாக இருக்கவேண்டும் என்று செயல்படுபவர். அவரது சீடர்தான் ருவாண்டா நாட்டின் அதிபர் போல் ககாமே. அவர்களின் அதிரடியான ஆட்சியில் சர்வாதிகாரம் இருந்தாலும் நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனாலும் மாற்றம் என்பது ஆப்பிரிக்காவில் மிகவும் விரும்பப்படுவதால் கண்டிப்பாக எதிர்க்கட்சி உகாண்டாவில் வெற்றியை பறிக்கும் முறைப்படி தேர்தல் நடந்தால். அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. சாகும்வரையில் பதவியில் இருந்துதான் செல்வார்கள். இல்லையேல் TRUTH FINDING & RECONCILIATION COMISSION ஆரம்பித்து இவர்களை புதிய தலைவர்கள் செக்கில் போட்டு நசுக்கிவிடுவார்கள்

 • Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ

  This is just a ning of the end of social media's arrogance and power over world government. Wait and see most the of the countries will start to ban these all hegemonial money powered media corporations. India and Australia is thinking to control their power in their countries. Corporations are the government and cannot over power the government.

 • ஆப்பு -

  அதாண்டா ... இதாண்டா... நாந்தாண்டா உகாண்டா... வாட்சப் வேணாண்டா... ஃபேஸ்புக்கும் வேணாண்டா...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  எல்லா நாடுகளிலும் ஆளும் கட்சிகள் எதிர் கட்சிகளை இதுபோன்று தடுத்து நிறுத்துவது பொதுவாக ஆகிவிட்டது.

Advertisement