dinamalar telegram
Advertisement

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 102 பேர் பாதிப்பு

Share
புதுடில்லி: உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும், நேற்று முன்தினம்(ஜன.11) வரை 96 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவருடன் வந்தவர்கள், தொடர்பில் இருந்த மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. சூழ்நிலை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படுவதுடன், மாநிலங்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    இந்த உருமாறிய காரோண மாதிரி மீண்டும் இந்த பொங்கல் விளம்பரம் எதையுமே படிக்க விடாமல் உயிரை வாங்குது.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    நூறு, ஆயிரம், லட்சம், கோடி, நூறு கோடியானூலும் யாரும் கவலை படறாமாதிரியில்லை.

  • J.Isaac - bangalore,இந்தியா

    கொரனோ கொடுமையிலும் மனித குணங்கள் உருமாற்றம் அடையாததால், கொரனோ உருமாற்றம் அடைந்துள்ளது.

  • saravan - bangaloru,சவுதி அரேபியா

    கண்டுபிடித்த வெக்க்சின் கட்டுப்படுத்துது அப்புறம் என்ன பத்தோ பதினொன்னா..சும்மா இருங்கய்யா.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    2019 கொரோனாவும் இதேபோல் ஸ்லொ மோஷனில்தான் பரவ ஆரம்பித்தது.

    • Ramakrishnan K - nagercoil,இந்தியா

      சொல்லிட்டாருயா ஜோசியர். இன்னுமாயா இத நம்புற

Advertisement