சென்னையில் நாளை பராம்பரிய கார்,இரு சக்கர கண்காட்சி
மாற்றம் செய்த நாள்: ஜன 09,2021
Share
1920 ம் ஆண்டு முதல் 1970 ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்த 65 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் கண்காட்சி இன்று சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.இது குறித்து மெட்ராஸ் ெஹரிடேஜ் மோட்டாரிங் கிளப் செயலாளர் எம்.எஸ்.குகன் கூறியதாவது. கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கிளப்பின் நோக்கம் பராம்பரிய வாகனங்களை பாதுகாத்து புதுப்பித்து மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதாகும்.இதற்கான பழமையான வாகனங்களை ரோடுகளில் ஒட்டிச் சென்றுள்ளோம் இப்போது கொரோனா காரணமாக ரோடு ேஷாவை தவிர்த்து ஒரே இடத்தில் கண்காட்சியாக வைத்துள்ளோம்இந்த கண்காட்சியில் முதல் முதல் கண்டுபிடிக்கப்பட்ட கார்களின் மாடல்கள் உள்பட பல கார்கள் இடம் பெறவுள்ளது.உலகம் முழுவதுமே பழமையான விஷயங்களை போற்றி பாதுகாப்போர் உண்டு. அதில் கார்கள் மீது தனிக்கவனம் செலுத்துபவர்களில் நானும் ஒருவன்.என்னிடம் மட்டும் முப்பதிற்கும் அதிகமான பழமையான கார்கள் உள்ளன.நான் பழமையான கார்களை பராமரிக்கும் வித்தைத் பார்த்து என்னிடம் தங்களது காரைக்கொடுத்த பெரிய விஜபிக்கள் உண்டு.என்னிடம் உள்ள பழமையான கார்களில் பல கார்கள் இப்போதும் சாலையில் ஒடும் தகுதியுடனேயே உள்ளது.இந்தப் பழமையான கார்களை பராமிரிக்க என்றே பெரிய ஊர்களில் மெக்கானிக் ெஷட் உள்ளது ஸ்பேர் பார்ட்ஸ் தேவை என்றால் பெரும்பாலும் கிடைத்துவிடும் இல்லையேல் தயார் செய்து தருவதற்கு ஆட்கள் உள்ளனர். இந்த கார்களை ரெகுலராக ஒட்டுவது கிடையாது இது போன்ற கண்காட்சிகளுக்கு கொண்டு செல்வதுடன் சரி மற்ற நேரங்களில் பாரமரித்து பத்திரப்படுத்தி வைத்திருப்போம் என்றார். காலை பத்து மணி முதல் மதியம் 2 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். -எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!