கொரோனா முடிவுக்கு வரப் போகுது உலக சுகாதார நிறுவனம் பெருமிதம்
நியூயார்க்:''கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் துவங்கலாம்,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலர், அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுச் சபையில், கொரோனா குறித்த முதல் உயர்மட்டக் குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
இதில், உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலர், அதனோம் கேப்ரியாசெஸ் கொரோனா, மனித நேயத்தின் மிக உயரிய மாண்பையும், கோரமான முகத்தையும் ஒருசேர வெளிக்காட்ட உதவியுள்ளது. இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பூசி மருந்துகள் நன்கு பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால், கொரோனா ஒழிந்தது என, உலக மக்கள் கனவு காணத் துவங்கலாம். அதேசமயம், கொரோனா தடுப்பூசி மருந்து, அனைத்து நாடுகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். அதில், பணக்கார நாடுகள், ஏழை மற்றும் வளரும் நாடுகளை வஞ்சிக்கக் கூடாது. உலக சுகாதார நிறுவனத்தின், 'ஆக்ட் - ஆக்சிலரேட்டர்' திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நாடுகளுக்கும் சீராக விநியோகிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு உடனடியாக, 32 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு மேலும், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், பணக்கார நாடுகள், தாராளமாக இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
தடுப்பூசி மருந்து, உலகளவிலான வறுமை, பசி, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை தீர்க்காது. அவற்றுக்கு, கொரோனா பிரச்னை முடிந்த பின் தீர்வு காண வேண்டும்
இவ்வாறு, அவர் பேசினார்.
ஐ.நா., பொதுச் சபையில், கொரோனா குறித்த முதல் உயர்மட்டக் குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
இதில், உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலர், அதனோம் கேப்ரியாசெஸ் கொரோனா, மனித நேயத்தின் மிக உயரிய மாண்பையும், கோரமான முகத்தையும் ஒருசேர வெளிக்காட்ட உதவியுள்ளது. இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பூசி மருந்துகள் நன்கு பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திட்டத்திற்கு உடனடியாக, 32 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு மேலும், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், பணக்கார நாடுகள், தாராளமாக இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
தடுப்பூசி மருந்து, உலகளவிலான வறுமை, பசி, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை தீர்க்காது. அவற்றுக்கு, கொரோனா பிரச்னை முடிந்த பின் தீர்வு காண வேண்டும்
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (19)
கைக் கழுவுதல் பத்தாது, தடுப்பூசியும் பத்தாது என்று சொன்னவர், இன்று இந்த செய்தியை சொல்லியிருப்பது, இவர் மீது கொஞ்சமிருந்த நம்பிக்கையும் குறைகிறது.
கொரோன குறைவதில் உலக சுகாதார அமைப்பின் பங்கு என்ன? இதன் தலைவரின் தவறான வழிகாட்டுதலினால் தான் அதிகமாக பரவியது கொரோன... சீன தேச எடுபிடியான அதன் தலைவர் தான் இன்று உலகம் அவதி பாடுவதின் காரணம்
இது இப்போதைக்கு ஒழியாது என முன்பே தெரிவித்து இருந்த இவர் இப்பொழுது கனவு காண சொல்லியிருக்கிறார்.. பொதுவாக பகற்கனவு பலிக்காது என கூறுவார்கள் .. எனவே திருவாளர் கேப்ரியாசெஸ் இப்போதைக்கு கொரோனா ஒழியாது என சூசகமாக கூறியிருக்கிறார் ...
இவுரு வாயில இப்பதான் நல்ல வார்த்தை வந்துருக்கு . வைரஸ கெளப்பிவிட்டதும் இவுரு தான் அதுக்கு மருந்து கண்டுபிடிச்சதும் இவுருதான் . மெடிக்கல் மாஃபியா கும்பல் தலைவர் இவர்
திட்டமிட்டு சீனாவில் உருவான உருவாக்கிய கொரோனாவை உலகம் முழுக்க பரப்பி,பல லட்சக்கணக்கான மக்களை கொன்று, உலக பொருளாதாரத்தை நாசமாக்கி, தொழில்துறையை அடியோடு முடக்கி, பல லட்சக்கணக்கானோர் வேலையிழப்புக்கு உள்ளாக்கி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மெடிக்கல் மாஃபியாக்கள் கோடிகளை குவிக்க காரணமாக இருந்த சீனாவின் அல்லக்கை இந்த WHO. செயலாளர். சீன அதிபருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.