உ.பி.,சட்ட மேலவை தேர்தல்:ஆக்ராவில் பா.ஜ.,முதல் முறையாக வெற்றி
லக்னோ: உ..பி., சட்ட மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ., சமாஜ்வாடி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பட்டதாரிகளுக்கான ஆக்ரா தொகுதியில் பா.ஜ., முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து உ..பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறியதாவது: காலியாக உள்ள 11சட்டமேலவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ., சமஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பாக தேர்தலில் சுமார் 199 பேர் போட்டியிட்டுள்ளனர். காலியாக உள்ள 11 இடங்களில் 5 இடங்கள் பட்டதாரிகளுக்கும் ஆறு இடங்கள் ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கான காலியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பா.ஜ., மூன்று இடஙகளிலும் சமஜ்வாடி கட்சி இரண்டு இடங்களையும் பிடித்துள்ளது. பட்டதாரிகளுக்கான வாரணாசி, லக்னோ மற்றும் மீரட் ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சட்டமேலவைக்கான மொத்தம் உள்ள 100 இடங்களில் சமாஜ்வாடி கட்சிக்கு 52 பேரும், பா.ஜ.,வுக்கு 19 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 8 பேரும், காங்.,சார்பில் இரண்டு பேரும், அப்னாதளம், மற்றும் ஷிக்ஷா தளம் கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் உள்ளனர். மேலும் மூன்று சுயேட்சைகள் மற்றும் 14 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பட்டதாரிகளுக்கான இடமான ஆக்ராவில் முதன் முறையாக பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.,வின் சார்பில் போட்டியிட்ட மன்வேந்திர பிரதாப்சிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசீம் யாதவை 5,477 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் ஆசிரியர்கள் வக்கீல்கள் பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்போம். மாணவர்களுக்கான கல்வி கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பு படிப்புகளை துவங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (5)
தின மலர் போன்ற நாளிதழ்கள் பாராட்டப்பட வேண்டியவை. தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்.
U. P. ல் பா. ஜ. க. வெற்றி என்பதை,. எந்த ஊடகமும், (தினமலர் தவிர)வேறு எதிலும் போட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால், நாக்பூரில் பா. ஜ. க தோல்வி என்பதை (மேலவை தேர்தல்) சில தொலைக்காட்சி ஊடகங்களிள் பார்த்தேன். இது தான் ஊடகங்களின் நடு நிலை போலும்.
கோர்ட் தீர்ப்புப்படி பட்டதாரி தொகுதி வேட்பாளர் பட்டதாரியாக இருக்க வேண்டியதில்லை😉.ஆசிரியர் தொகுதி வேட்பாளர் கை நாட்டாகக்கூட 😇? பின்னர் யாருக்காக மேலவை ?
BJPக்கு வாழ்த்துக்கள்
பிஜேபி பெருமை பேசுவதில் இங்கு ஒன்றும் இல்லை