தமிழகத்தில் மேலும் 1,407 பேர் கொரோனாவிலிருந்து நலம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,5) 1,407 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.66 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்தனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,777 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் இன்று 1,366 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,88,920 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 227 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-160) மூலமாக, இன்று மட்டும் 70,881 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 24 லட்சத்து 05 ஆயிரத்து 328 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்தனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,777 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!