dinamalar telegram
Advertisement

விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: தோமர் வலிறுத்தல்

Share
டில்லியில் கடுங்குளிர் நிலவும் சூழ்நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும்: தோமர் வலியுறுத்தல்

புதுடில்லி: டில்லியில் கடுங்குளிர் நிலவும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதிலும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை.இதையடுத்து வரும் டிச. 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியது, விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்கத்தினர் மிகவும் ஒழுக்கத்துடன் பங்கேற்றமைக்காக பாராட்டுகிறேன்.
மீண்டும் டிச.9-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என நம்புகிறேன். தற்போது டில்லியில் கடுங்குளிர் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் போராட்டத்தில் முதியவர்களும் பங்கேற்றுள்ளதால், அவர்கள் தங்கள் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

    நீங்க கொண்டு வந்த நொன்னை சட்டத்தை பின் வாங்குங்கள். விவசாயிகளிடம் சட்டம் கொண்டு வருவதற்கு முன் பேசினீர்களா. சும்மா கார்பொரேட் முதலாளியிடம் நாட்டை தூக்கி கொடுத்து விட வேண்டும். உலகமே ஊற்று நோக்குத்து இந்த நொன்னை சட்டத்திற்கு ஏதிரான போராட்டத்தை.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    விவசாயிகளை பொஊரட வச்சது யாரு ?? இப்ப வந்துகிட்டு கைவிடவேண்டும் கால் விடவேண்டும் என்று பிதற்றுவது அர்த்தமற்றது. உலகமே இந்தியாவை உட்டு நோக்குகிறது .இந்தநூதண்டின் மாபெரும் போராட்டமாக வெடித்து உள்ளது .எத்தனை மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் தயக்கம் காட்டுவது வெக்க கேடு மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொடுத்தானுள்ளார்கள் தக்க சமயத்தில் பதில் தருவார்கள்

  • sankaseshan - mumbai,இந்தியா

    சம்பத்குமார் என்ன சொல்லறார் என்றால் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம்போட்டு தரணும் .

  • natesa -

    there is pay commission for government staffs, but what about farmers?. majority peoples are farmers, farmers must rule the India. politicians cant understand farmers difficulties.

  • siriyaar - avinashi,இந்தியா

    அவங்க விவசாயிகள் இல்லை, அவர்களுக்கு தினமும் கூலியும் குவார்ட்டரும் கிடைக்குது உழைக்காமல். போராட்டத்தை திருத்த வேண்டுமானால் அவங்களுக்கு நீங்க இரண்டு குவாட்டர் இரண்டு மடங்கு கூலி கொடுக்க, இப்ப சீனா கார்ங்க வந்து மூன்று மடங்கு தந்த இவங்க அவங்க சொன்னதற்காகவும் போராடுவாங்க. நான் ஒரு விவசாயி சொல்லறேன் சுட்டு தள்ளுங்கய்யா அவங்களை.

Advertisement