ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 4 சுற்றுப் பேச்சுகளிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், 5வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடிக்கிறது. இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு, ‛உள்நாட்டு விவகாரத்தில் கருத்துக்கள் தேவையற்றது,' என மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

அதற்கு ஸ்டீபானே கூறுகையில், ‛ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு அவசியம் அனுமதியளிக்க வேண்டும்,' எனக் கூறினார்.
வாசகர் கருத்து (27)
ஐநாவில் சீனாவின் பிரதிநிதிகள் உள்ளார்கள். அவர்கள் இப்படித்தான் கூறுவார்கள்
சீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் நடந்த மக்கள் போராட்டம், ட்ரம்ப்பை எதிர்த்து கறுப்பின மக்கள் செய்த போராட்டம்,தாய்லாந்தில் மன்னரை எதிர்த்து அங்குள்ள மக்கள் நடத்திய போராட்டம் இன்னும் நெறய சொல்லிக் கொண்டே போகலாம், இதெல்லாம் நடந்தபோது கண்டனம் கூட வேண்டாம் ஒருசின்ன அறிக்கை கூட விடாமல் இந்த ஐநா வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டியிருந்ததே? இப்போது இந்தியாவுக்கு மட்டும் அறிவுரை ஏன்? வூகானிலிருந்து கொரோனா இந்த உலகத்துக்கு பரவியதை சீனாவுடன் சேர்ந்து மறைத்த இந்த முதுகெலும்பில்லாத ஐநாவிற்கு இந்தியாவைப் பற்றி பேச அருகதை இல்லை.இதற்கு மத்திய அரசு ஐநாவுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
"ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு". நன்றி நீரோக்களுக்கு புரிந்தால் சரி.
இந்த கூட்டத்தின் க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது, அதான் ஐ.நா., கனடா போன்ற அமைப்புகளும் நாடுகளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன
Oruvar tham porulai idai tharagar indri virppanai seiyumpothu avar muzhu mana thirupthiyudan muzhu palanaiyum adaivar enbathu yavarum arinthathe. Athagaiya vaaippalikkum thiranai ethirppathu thannambikkaiyai ethirppatharkku samam.