dinamalar telegram
Advertisement

ஸ்பூட்னிக்-5 தடுப்பு மருந்தை விநியோகிக்கத் தொடங்கிய ரஷ்யா

Share
மாஸ்கோ: ரஷ்யாவில் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து ரஷ்ய விஞ்ஞானிகளால் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலை நாடுகளை நம்பி இருக்காமல் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தாங்களாகவே கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து அதில் வெற்றி பெற்று வருகின்றன. ரஷ்யா சர்வதேச மருத்துவ நிறுவனங்களது அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தங்களது தடுப்பு மருந்தை ரஷ்ய மருத்துவமனைகளுக்கு வழங்க தொடங்கிவிட்டது.

ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்திப்பார்த்து அதனால் அவர் நல்ல பயன் அடைந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னதாக அறிவித்திருந்தார். தற்போது 70-க்கும் மேற்பட்ட ரஷ்ய மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்து ரஷ்ய அரசால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளைப்போல ரஷ்யாவும் முதலில் முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இவர்களது உடலில் இந்த தடுப்பு மருந்து சோதனை செய்து பார்க்கப்படும். இது வெற்றிபெறும் பட்சத்தில் பொதுமக்களுக்கும் அளிக்கப்படும். ஆனால் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், மூச்சு திணறல் உள்ளவர்கள் உள்ளிட்ட சிலருக்கு தற்போது தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை.

இந்தத் தடுப்பு மருந்து இரண்டு ஊசிகள் மூலமாக செலுத்தப்படுகிறது. முதல் ஊசி நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்தப்படும். தற்போது ரஷ்யாவில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கிய பட்டியலில் நான்காவது நாடாக ரஷ்யா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement