சென்னை குடிசைவாசிகளுக்கு இலவச உணவு: முதல்வர் பழனிசாமி உத்தரவு
சென்னையில் சுமார் 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசை பகுதியில் வசிக்கின்றனர். மொத்தம் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். சமுதாய நலக்கூடங்கள் அம்மா உணவகங்கள் மூலம், நாளை காலை உணவு துவங்கி டிச., 13ம் தேதி இரவு வரை குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் 3 நேரம் உணவு வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
7 பேரின் குடும்பத்திற்கு நிதி
முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு ரூ.4 லட்சம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், ரூ.6 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்தும், மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
வாசகர் கருத்து (17)
வேண்டாத வேலை..... பிறகு தேர்தல் நெருங்கும் பொது ஒவ்வொரு கட்சியாக ஓசி சோறு போடுகிறேன் என்று சொல்லும். பிறகு வாழ்க்கை முழுவதும் சோறு கேட்பார்கள். ஒரு இனத்தை சாராய அடிமையாக்கியது இலவசங்களுக்கு அடிமை ஆக்கியது ஆகியன போதாது என்று குடும்பம் முழுக்க அடிமையாக்க பார்க்குது திராவிட இயக்க அரசு ...உருப்படவே உருப்படாது
5சவரன் நகையை அடமானம் வைத்து 50000ருவா வாங்குங்கள், எங்களுக்கு ஓட்டு போடுங்க நகை கடனை தள்ளுபடி செய்து நகையை திருப்பி தருவோம்,ஏமாற்றுதல் போன்று இல்லை.
அன்பு குடிசைவாசிகளே இந்த இலவசத்தை நினைவில் வைத்து, வருகிற தேர்தலில் குத்து குத்துன்னு குத்தி மீண்டும் அவர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக அரியணையில் அமர்த்த வேண்டும். ஓக்கே?
மக்களை சுரணையற்றவர்களாக சோற்றாலடித்த பிண்டங்களாக மாற்றுகிறார்களே ~ சொன்னது கட்டுமரம்.
கட்சி நிதியில் இருந்து கொடுத்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.