விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஹரியானா எல்லையில் , பஞ்சாப் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில் போராட்டம் துவங்குவதற்கு முன்னர் ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டம் துவங்கிய பின்னர், 2 முறை பேச்சு நடந்தும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால், 5வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு தரப்பினரும் மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களுக்கான உணவை அவர்களே கொண்டு வந்தனர். பேச்சுவார்த்தைக்கு முன்னர், எழுத்துப்பூர்வமான விளக்கத்தை, விவசாயிகளிடம் மத்திய அரசு அளித்தது. இன்றைய பேச்சுவார்த்தையில், மத்திய அரசின் சார்பில் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தை துவங்கும் முன்னர் விவசாயத்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறுகையில், விவசாயிகளின் சந்தேகங்கள் இன்றைய கூட்டத்தில் தீர்க்கப்படும். எதிர்க்கட்சிகள் தான் போராட்டத்தை தூண்டி விடுகின்றன. விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.

முன்னதாக இன்று காலை, இந்த போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், விவசாய அமைச்சர் தோமர் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
வாசகர் கருத்து (3)
"The law does not ban use if seeds and leaves of the cannabis plant if these are not mixed with other parts of the vegetation. This is why bhang, commonly consumed by people in northern and eastern parts of India during Holi festival, is not illegal to consume. Similarly, chutney made from cannabis seeds and popular in the Himalayan regions particularly Uttarakhand is not banned." எனவே கஞ்சா பயிரிடலாம் பணம் கொட்டும் என்று சொல்லி விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு என்று சுட்டிக் காட்டினால் போராட்டம் முடிவடையாதா ? பாவம் ஸ்ரீ வினோபாஜி "இந்த நாட்டு விவசாயிகள் நல்லவர்களாக இருப்பதாலேதான் என்ன கஷ்டம் வந்தாலும் மக்களை அழிக்கும் கஞ்சா பயிர் செய்யாமல் உணவுப் பொருட்களை விளைவிக்கிறார்கள்" என்றார் உயிருடன் இருந்தால் மோடி அரசை என்ன சொல்லிப் பாராட்டுவார் ?
ஆயிரம் முறை பேச்சு நடத்தினாலும் மோடி அரசு தன் மூர்க்கத்தனத்தைக் கைவிடாது.
கடந்த 10 நாட்களாக நடுங்கும் குளிரில் விவசாயிகள். மீண்டும் பேச்சு வார்த்தை 9 தேதிக்கு ஒத்தி வைப்பு. 4 நாட்கள் எதற்கு. கடவுள் கூட மன்னிக்க மாட்டான். மீண்டும் சொல்கிறேன் "இடிப்பார் இல்லா ஏமாற மன்னன் கெடுப்பாரிலானு கெடும்"