dinamalar telegram
Advertisement

நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா

Share
பீஜிங்: சீனா, சமீபத்தில் நிலவினை ஆய்வு செய்ய அனுப்பிய சாங்கே 5 எனும் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் அந்நாட்டின் கொடியை ஏற்றியது. இதன்மூலம் நிலவில் கொடி ஏற்றிய 2வது நாடானது. முதலில் அமெரிக்கா கொடியேற்றியது.

1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார். 1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக் கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா. அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக, கடந்த 2012-ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையில் சீனாவும் இணைந்துள்ளது. சாங்கே 5 என்ற லேண்டரை நிலவில் நிலைநிறுத்திய சீனா, அதன்மூலம் அந்நாட்டின் கொடியை நிலவின் மேற்பரப்பில் ஏற்றியது மட்டுமல்லாமல் அதனை புகைப்படமும் எடுத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை சீனா விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் கொடியேற்றிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அமெரிக்கா கொடிகள் அனைத்தும் மனிதர்கள் ஏற்றியது, சீனாவின் கொடி, லேண்டர் ஏற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

  • அறவோன் - Chennai,இந்தியா

    பதினோரு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பறித்தது இன்றைய இந்தியாவின் சாதனை

  • அறவோன் - Chennai,இந்தியா

    சீனாவிற்கு வாழ்த்துக்கள் 🌟✨

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை". அவனுங்களா எங்கோ கொடியை நட்டு வைத்து விட்டு நிலவில் நட்டு வைத்து விட்டோம் என்று சொல்வதை இன்னும் மக்கள் நம்புகிறார்கள். முன்னர் அமெரிக்கா கொடி நட்டதும் பொய். இப்பொழுது சீனா கொடி நட்டதும் பொய். எங்கே அவர்களை சில கிலோ மீட்டர் ஆழத்தில் கடலில் மூழ்கிய விமானத்தை கண்டு பிடிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் சீன இன்று உலகத்தில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. நல்லவர்கள் கையில் இருந்தால் நன்மை. தீயவர்கள் கைகளில் அறிவியல், தொழில்நுட்பம் இருந்தால் நடப்பது வேறு.

  • SUBRAMANIAN P - chennai,இந்தியா

    நிலவுக்கு நாங்க ஒரு பாட்டியை அனுப்பி வடை சுட்டு வியாபாரமே பண்ணி இருக்கோம். இவனுங்க என்னடான்னா கொடி நட்டோம், பிடுங்கினோம்னு சொல்லிட்டு இருக்கானுங்க. டுபாக்கூர்.

Advertisement