dinamalar telegram
Advertisement

ஆன்மிக அரசியல் என்றால் என்ன ? தமிழருவி விளக்கம்

Share
சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்ததும், வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர வைப்பது தான் அற்புதம், அதிசயம் என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.


நடிகர் ரஜினி, வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். புதிய கட்சி அறிவிப்பு, தொடக்க விழா குறித்து ரஜினியின் போயஸ் தோட்டஇல்லத்தில் ஆலோசனை நடந்தது. அதில், கட்சியில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன், ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு பின்னர், தமிழருவி மணியன் கூறியதாவது: கட்சி பெயர்,சின்னம் உட்பட அனைத்தையும் ரஜினி அறிவிப்பார். கட்சி அடிப்படை கட்டுமானம், செயல்திட்டங்கள் குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆலோசனை செய்தோம். கட்சிக்கு தேவையான அம்சம் குறித்து ஆலோசனை நடத்தினோம். கட்சி துவக்கிய பின்னர், பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள். பேரெழுச்சியை சந்திக்க போகிறீர்கள். எழுச்சி எழக்கூடிய நிலையில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பதை ரஜினி தான் முடிவு செய்வார். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும்.

முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ,நாங்களோ தற்போது பேசவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிப்பதால், தங்களுக்கு பாதிப்பில்லை என்று தான் அனைவரும் கூறுவர். பாதிப்பில்லை எனக்கூறுவது பாதிப்பு உள்ளது என்பதுதான் பொருள். அதிமுக, திமுக.,வின் தவறுகளை பேசிப்பேசி மக்களிடம் செல்ல விரும்பவில்லை. மற்றவர்களை விமர்சித்து கட்சி வளர்க்காமல், ஆன்மிக அரசியலை செய்வோம்.

எதிர்மறை அரசியல் வேண்டாம்
எல்லோரை போல் எதிர்மறை அரசியல் செய்ய விரும்பவில்லை. எவரை பற்றியும் எதையும் பேசாமல், நான் வந்தால் இதை செய்வேன்; இதற்காக கட்சியை துவக்கினேன். என் மீது நம்பிக்கை இருந்தால் ஆதரவு தாருங்கள் என்றுதான் ரஜினி சொல்வார். மற்றவர்கள் மீது அரசியல் கணைகளை வீசி அதன் மூலம் கட்சியை பலப்படுத்துவது மற்றவர்கள் செய்தது.

ஆன்மிகத்திற்கும் ஜாதிக்கும், மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆன்மிக அரசியலுக்கும் மத அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மத அரசியல் கண்ணாடியை கழற்றி விடுங்கள்.

ஆன்மிக அரசியலை ரஜினி புதிதாக கண்டெடுக்கவில்லை. மஹாத்மா காந்தி கண்டெடுத்தது. ஆன்மிகவாதி என சொன்னால், அவன் பற்றற்றவனாக இருக்க வேண்டும். சுயநலமில்லாதவனாக இருக்க வேண்டும். யாரையும் குறை கூறியோ, யாரை விமர்சனம் செய்தோ அரசியல் செய்ய தேவையில்லை. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதும், அன்பை தழுவி அன்பால் அரசியல் செய்வதே ஆன்மிக அரசியல். ஆன்மிக அரசியலை செய்வதே ரஜினியின் நோக்கம்.

ஆட்சியில் அமர வைப்பது தான் அற்புதம்
மற்றவர்களை விமர்சித்து, கட்சியை வலுப்படுத்தும் அரசியலை ரஜினி முன்னெடுக்க மாட்டார். ரஜினி வந்ததும் அவரை வாக்காளர்கள் ஆட்சியில் அமர வைப்பது தான் அற்புதம் அதிசயம்.எம்ஜிஆர் கட்சி துவக்கிய போது அவருடன் துணை நின்றவர்கள், ரஜினிக்கு உதவி செய்வார்கள் என சைதை துரைசாமி கூறியது 100 சதவீதம் உண்மை. புரிதல் இல்லாத போது ரஜினி, உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் விமர்சித்தேன். ரஜினியை புரிந்த பிறகு அதனை மாற்றிவிட்டேன். ரஜினி கட்சி துவங்கியவுடன் காந்திய மக்கள் இயக்கம், அதனுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (73)

 • venkata achacharri - india,இந்தியா

  ATHAVATHU IVAR SOLLA VARUM ANMEEGA ARASIUAL ENRRAL KUDUMMBA PATRU PANA PATRU CASE PODALAM MATTRA THIL MATHIRAM PATRU IRUKKA KOODATHU ANAL MATRA PATRU ENNA ENBATHU THAAN INNUM PURIYAVILLAI MATTRAM ELUCHI POLA THAAN

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அய்யா தமிழருவி அவர்களே .. நீங்கள் நியாயமானவர் .. நீதியானவர் ..அப்படியே மிகுந்ந்த ஒழுக்கமும் உள்ளவர் என்று நினைப்பவர்களுக்கு பேரிடியாக தற்போது இருப்பது மிகுந்த தாழ்நிலையை கொண்டுவந்துவிட்டது ..அதாவது கடந்த ஆண்டுகளில் நீங்கள் ..ரஜினிகாந்தை சாட்டியது இன்றும் வலைத்தளங்களில் குன்றின்மேல் இட்ட விளக்காக திகழ்கிறது .. நீங்கள் ரஜினிகாந்தை ஒரு கண்டக்டராக இருந்தவர் என்றும் தமிழகத்தில் வந்து கோடிகோடியாக சம்பாதித்து கர்நாடகாவில் முதலீடு செய்து தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாதவர் எப்படி அரசியலுக்கு வரமுடியம் என்று ஆக்ரோஷமாக தாங்கள் பேசியது உலகமே காண்கிறது .. இன்று சொல்வதையும் உலகம் காண்கிறது என்பதை உணர்வுள்ளவராக இருந்தால் மட்டும் சிந்தித்து முடிவு செய்ய முடியும் .. இல்லையெனில் தொடவதில் தவறில்லை ..

 • VINCENT G - DINDIGUL,இந்தியா

  ITS OK SIR. WELCOME. BUT THE HEART OF THE SITUATION HERE IS... DECEMBER 6 ALMOST SEVERAL PLACES ESPECIALLY CHENNAI IN TAMIL NADU IS UNDER WATER. PEOPLE ARE SUFFERING EVERYWHERE.. WHAT RAJINI GOING TO DO IN DECEMBER 31 IS UNPREDIC LIKE THESE CYCLONES (NIVAR, BHUREVI) IF YOU THINK ONLY THE PRESENT GOVERNMENT WILL HAVE TO MAKE PLANS TO PROTECT THE PEOPLE, YOU ARE WRONG. LET HIM SAY WHAT HE IS GOING TO DO FOR THE PEOPLE OF CHENNAI, WHO ARE UNDER WATER... PLEASE HELP THE PEOPLE NOW UNITY, AND TALK LATER... THIS MSG IS FOR EVERY ONE, NOT TO ANYONE SPECIFIC...

 • J. Vensuslaus - Nagercoil,இந்தியா

  ஆன்மிக அரசியல் என்றால் நேர்மையான அரசியல் என்று பொருள் கொள்ளலாம்.

 • Rajan - chennai,இந்தியா

  ஆன்மீகஅரசியில் என்றால் ரஜனி மூலமாக பிஜேபி சில இடங்களை பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.. ரஜனி ஏய்க்கெனவே கின்டநீ... ரஜனிக்கு பிஜேபி பினாமி பிஜேபி ரஜனி பினாமி...

Advertisement