போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ஐநாவில் இந்தியா ஆதரவு!
வியன்னா: மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்துகஞ்சாவை ஐநா நீக்கியுள்ளது. இதற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.
ஐ.நா.,வின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. கஞ்சாவை வேறு பட்டியலுக்கு மாற்றுவதற்கு உலக சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளையும் போதை மருந்துகளுக்கான ஆணையம் பரிசீலித்துள்ளது. கஞ்சாவை பட்டியல் மாற்றம் செய்வது குறித்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
எனினும், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஆதரவாக 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன. ஏற்கெனவே பெரும்பான்மையை எட்டிவிட்ட நிலையில், ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஞ்சாவுக்கு ஆதரவாக இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. உக்ரைன் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (42)
போதை விஷயத்தில் மோடி அதர்மம் செய்கிறார்.
இனி நெல்லும், கரும்பும், காய்கறிகளும் பயிரிட்டு கஷ்டப்படாமல், கஞ்சாவில் காசு அள்ளலாம் அரசும் ஊக்குவிக்கும், கஜானாவை நிரப்ப
தமிழகம் கஞ்சா சிகரெட் விற்பனையில் முதல் இடத்தில வந்தது என்ற செய்தி விரைவில் வரும் . டாஸ்மாக் போல் கஞ்சா மேக் வரும் .சிகரெட் பேக்டரி எல்லாம் புகையிலை பயிர் இடாமல் நேரடியாக கஞ்சா பயிர் செய்ய சொல்வார்கள் .இதற்க்கு உடனடி வங்கி கடன் கிடைக்கும் .
இன்னமும் மனு நீதி சொன்ன குற்றங்கள் அனைத்தையும் இல்லையென்று சொல்ல வேண்டுமென போராட்டம் நடக்கிறது அதிலே இதை அனுமதித்தால் என்ன நம்மால் கட்டுப்படுத்த இயலாத அனைத்தையும் லஞ்சம், ஊழல் உட்பட எதுவுமே குற்றம் இல்லை என்று சொல்லிவிட்டால் நம் நாடு உலகிலேயே உயர்ந்து நிற்குமல்லவா
சிறை சாவு குறையும்