dinamalar telegram
Advertisement

நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு

Share
புட்காம்: வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்களை காஷ்மீர் வனத்துறையினர் வெட்டிச்சாய்த்தனர்.

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் கனிடாஜன் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் ஆப்பிள் மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று வனத்துறையினர் அங்கு வந்து, நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்களை வெட்டி சாய்த்தனர்.
இது தொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறுகையில், ‛வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டி சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இடத்தை காலி செய்யாததால் மரங்களை வெட்டிச் சென்றனர்,' என்றார்.

இது குறித்து மரங்களை வளர்த்து பறிகொடுத்தவர் கூறுகையில், ‛நாங்கள் இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் கூட இங்கு வாழ்ந்தபோதிருந்தே இந்த ஆப்பிள் மரங்களை நட்டுள்ளனர். இப்போது ஆப்பிள் மரங்கள் விழுந்து கிடப்பதை பார்க்கையில் மனம் நொந்து கொண்டிருக்கிறது,' என்றார்.
வனத்துறையினரிடம் விசாரித்ததில், ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் ஆகிவிட்டதாக கூறினர். மேலும், ‛எல்லா இடங்களிலும் வன நிலங்களை மீட்டெடுப்போம்,' என்றும் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (31)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அந்த மரம் புதிதாக வளர எவ்வளவு வருடம் ஆகும் .அப்படியே விட்டு இருந்தால் மிருகங்கள் பறவைகள் உணவாக அருந்தி இருக்குமே ?.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பாவம் ஆப்பிள் மரங்கள்.... வளர்த்தவர்கள் மேல் தவறு....அவற்றை வெட்டாமல் அதனை அரசுடைமை ஆக்கி இருக்க வேண்டும்...

  • Siva - Aruvankadu,இந்தியா

    இத்தனை நாள் கேட்பார் இல்லை. கேட்டால் ....... இனி வனவிலங்குகள் தன் வாழ்க்கையை சுதந்திரமாக வாழட்டும்.

  • சம்பத் குமார் -

    அரசாங்க வன நிலத்தில் மரம் வளர்ப்பு சட்ட படி குற்றமாகும். மேலும் வனங்கள் வனவிலங்குகளின் உறைவிடம் ஆகும் அதில் மனிதன் தனது விருப்பப்படி மரம் வளர்த்தல் கூடாது. இயற்கை உடன் இணைந்து வாழ்வோம் வனங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுக்காப்போம். நன்றி ஜயா.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலத்தில் மரத்தினை வேருடன் பிடுங்கி அரசு அலுவலக வளாகங்களில் நட்டிருக்கலாமே அரசு அதிகாரிகள் என்றாலே சிந்திக்கும் திறனற்றவர்கள் என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது

    • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

      புதிய மரம் வளர வெகுநாட்கள் ஆகாது. இதை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட ஆகும் செலவு ஏராளமாகும்..

Advertisement