dinamalar telegram
Advertisement

அரசியலுக்காக அல்ல: விவசாயிகளுக்காக போராட்டம் " - ஸ்டாலின்

Share
சேலம்: அரசியல் நோக்கத்திற்காக அல்லாமல், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக்கூடாது என அதிமுக செயல்படுகிறது. ஓரவஞ்சனையுடன் பல்வேறு முயற்சிகளை அரசு செய்கிறது. சேலம் போராட்டத்திற்கு வந்த விவசாயிகள், திமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக, கட்சி வளர்ச்சிக்கு, சொந்த நோக்கத்திற்காக அல்ல. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்காக நடக்கும் போராட்டம் என்பதை ஆளுங்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். முதல்வரும் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி சொல்வதை அப்படியே நிறைவேற்றும் போலீசார், இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.


நாம் ஆட்சிக்கு வரப்போகிறவர்கள் தான். இதில் மாற்றம் எதுவும் கிடையாது. விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, போராடும் விவசாயிகளை அழைத்து பேசி, பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் நடக்கிறது.

சுதந்திர இந்தியாவில் இதுவரை இது போன்று ஒரு போராட்டம் நடந்தது இல்லை. வரலாற்றில் இடம்பெறக்கூடிய அளவுக்கு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகாவில் விவசாயிகள் பங்கெடுத்துள்ளனர். போராட்டத்தின் மூலம் பா.ஜ., அரசை, விவசாயிகள் அசைத்து கொண்டுள்ளனர். அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை பா.ஜ., அரசு நிறைவேற்றியது.

‛‛நானும் ரவுடி தான், நானும் ரவுடிதான் '' என்பது போல், ‛‛ நானும் விவசாயி தான் '' என முதல்வர் பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார். அவர் விவசாயி அல்ல. வேடதாரி. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (149)

 • ஐதலக்கடி - துலுக்கப்பட்டி ,இந்தியா

  ஹ ஹீ ஹீ ஈ, ஏ விவசாயி நீ எந்த Agricultural College யில் படித்த, விவசாயத்தை பற்றி பேச? நிலத்தில் நீ ஒருநாள் முழுவதும் தனியாக கோவணத்துடன் ஏர் உழவு செய். அப்புறம் நீ ஊர் ஊரா திரின்சி விவசாயத்தை பற்றி பேசலாம் நைனா.....

 • RajanRajan - kerala,இந்தியா

  1970 கருணாநிதி 7 விவசாயி சுட்டுக் கொலை துப்பாக்கிச்சூடு திமுக வேளாண்மை விவசாயம் 1970 திமுக கருணாநிதி அராஜக ஆட்சி... மின்சாரக் கட்டணம் வெறும் ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. போராட்டத்தின் போது போலிஸை ஏவி விட்டது திமுக.. துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட துணிந்தது திமுக அராஜக அரசு.. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த ஏழு விவசாயிகள் துப்பாக்கி சூட்டில் இறந்தனர். அப்போதிருந்த திமுக ஆட்சி இதை ஏளனமாக பிச்சைக்காரர்கள்_போராட்டம் என்று விமர்சித்தது.. அப்போது கருணாநிதி துப்பாக்கியிலிருந்து_தோட்டா_வராமல் மலர்களா_வரும் என்று பேட்டி கொடுத்ததை இன்று உள்ள பலரும் அறியமாட்டார்கள்.. இவனுக தான் விவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்.. ஒரு ஓட்டு போட்டாலும் இந்த பாவமனைத்தும் நம் குடும்பத்தை, நம் சந்ததியை தான் பாதிக்கும்.. திமுக_வேண்டவே_வேண்டாம்_போடா திமுக தமிழகத்தின் சாபக்கேடு...

 • HSR - MUMBAI,இந்தியா

  அட்டகத்தி

 • Siva - Aruvankadu,இந்தியா

  நிஜமாகவே இவ்வளவு பேசினாரா... அல்லது உளறல்கள் கட் செய்து செய்தி போடுகிறார்களா.. ஆக தலைமையேற்ற தகுதி வந்து விட்டது போல தெரிகிறது.

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளர்க

Advertisement