dinamalar telegram
Advertisement

ஏமாறாதீங்க! மோசடி நிதி நிறுவனங்களிடம் ...பேராசையாலும் விழிப்புணர்வு இல்லாததாலும்

Share
Tamil News
மதுரை : மதுரையில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், பேராசையாலும் மோசடி நிதி நிறுவனங்களிடம் பணம் கட்டி ஏமாந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு படையெடுப்பது தொடர்கிறது.'நுாறு ரூபாய் கட்டினால்கூட போதும். மாதா மாதம் வட்டியுடன் அசலையும் தருகிறோம்' என ஆசைவார்த்தை கூறியதை நம்பி மதுரையில் 20 மோசடி நிறுவனங்களிடம் பணம் கட்டி நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர்.

அதேபோல் அனுப்பானடி பகுதி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் அரங்கேறியுள்ளது.இதேபோல் இன்னொரு மோசடி செனாய்நகரில் நடந்தது. இங்கு ஜேம்ஸ் மோசஸ் அந்தோணி, குருநாதன், பிரபாகரன், புஷ்பராஜ் ஆகியோர் நடத்திய 'கிளிக் அட்வர்ட் செல்யூசனில்' பணம் செலுத்தி அதன் இணையத்தளத்தில் யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட் உருவாக்கி 30 வினாடி ஓடும் 25 விளம்பரங்களை தினமும் பார்த்தால் செலுத்தும் முதலீட்டிற்கு ஏற்ப ரிபேட்ஸ் தொகை தரப்படும். அத்தொகை வாரம் தோறும் முதலீடு செய்தவர்கள் வங்கி கணக்கிற்கு வரும். பிறரை இது போல் பார்க்க செய்தால் 1 - 5 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.


இதை நம்பி பலர் ரூ.100 - ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்து ஏமாந்தனர். இதுகுறித்து மதுரை சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.போலீசார் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி செபி விதிப்படி 12.5 சதவீதத்திற்கு மேல் வட்டி கொடுக்கும் நிறுவனங்களை நம்பக்கூடாது. அரசு அனுமதி பெறாத திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது'' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அதிக வட்டிக்கு ஆசைப்படவேண்டாம் சகோதரர்களே

  • ஆப்பு -

    இதை விட பெரிய விஷயத்தில் எல்லாம் ஏமாந்திருக்கிறோம் சாமி. ரூவாய்க்கு 3 படி அரிசி, இலவச கிறைண்டர், மிக்சி, வாஷிங் மிஷின், டி.வி... அப்புறம் 20 அம்ச திட்டம், கரீபி ஹட்டாவோ, ஆளுக்கு 15 லட்சம். வருஷத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை.. இதை விட பெருசாவா இவிங்க ஏமாத்திடப் போறாங்க?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    மோசடி நிறுவனங்கள் மற்றும் அல்ல மோசடி மக்களிடமும் ஏமாறவேண்டாம், ஒரே தட்டில் சாப்பிட்டோம் , ஒரே அறையில் ஒரே கட்டிலில் படுத்தோம் என்றெல்லாம் கூறி கதறி ஏமாந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, பணம் பத்தும் செய்யும் என்பது போக, இன்று பணம் எல்லாவற்றையும் மறக்கடித்து வருவது வேதனை அளிக்கிறது, உறவு, நடப்பு எல்லாமே இன்று பணத்தினால் சீர்குலைந்து வருகிறது, ஆகவே மிகவும் எச்சரிக்கை தேவை,கடன் வாங்கியகர்கள் மற்றும் ஏமாற்றியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள், ஆனால் ஏமாந்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து செய்வது அறியாமல் நிலைகுலைந்து போகிறார்கள், வந்தே மாதரம்

Advertisement