1.20 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை
சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்றை கண்டறிய, 1.20 கோடி பேரிடம், ஆர்.டி.பி.சி.ஆர்., வாயிலாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 227 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 70 ஆயிரத்து, 378 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், சென்னையில், 356; கோவையில், 139; செங்கல்பட்டில், 85; திருவள்ளூரில், 66 என, மாநிலம் முழுதும், 1,391 பேருக்கு தொற்று உறுதியானது. மார்ச் முதல், நேற்று வரை, 1.20 கோடி நபர்களிடம் இருந்து, 1.23 கோடி மாதிரிகள், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அதில், சென்னையில், 2 லட்சத்து, 16 ஆயிரத்து, 867 பேர் உட்பட, 7 லட்சத்து, 87 ஆயிரத்து, 554 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில், 1,426 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து, 7 லட்சத்து, 64 ஆயிரத்து, 854 பேர், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில், 3,451; கோவையில், 963; செங்கல்பட்டில், 552 என, 10 ஆயிரத்து, 938 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில் நான்கு பேர் உட்பட, 15 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து இதுவரை, 11 ஆயிரத்து, 762 பேர் இறந்து உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!