திருப்பூர்:''இன்றைய இளைஞர்கள், நவநாகரிகம் என்ற பெயரில், கலாச்சாரம், பண்பாட்டை மறந்துவிடக்கூடாது,'' என, சிவலிங்கேஸ்வர சுவாமி பேசினார்.திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, பொரி மாற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கி, தினமும் அபிேஷகபூஜை நடந்து வருகிறது.
பொங்கல் விழாவையொட்டி, உலக நலன் வேண்டி, 27 நட்சத்திர வேள்விபூஜையும், கோமாதா வழிபாடு பூஜையும் நேற்று நடந்தது.கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடந்த இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி தலைமையிலான குழுவினர், யாக பூஜைகளை நடத்தினர்.நட்சத்திரத்துக்கு ஒன்று வீதம், 27 பசுமாடுகளை நிறுத்தி வைத்து, நட்சத்திர கோமாதா பூஜை நடத்தப்பட்டது.சிவலிங்கேஸ்வர சுவாமி பேசியதாவது:அன்றாடம் ஆயிரம் பணி இருந்தாலும், அடிக்கடி இறைவனை நினைக்க வேண்டும்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில், இறைவனை மறந்துவிடுகின்றனர். நவநாகரிகம் என்ற பெயரில், கலாச்சாரம், பண்பாடுகளை மறந்துவிடக்கூடாது; பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும்.பசுவின் உடலில், ஈசனில் துவங்கி அனைத்து தெய்வங்களும், தேவாதிதேவர்களும் வசிக்கின்றனர். பசுமாட்டை வழிபடுவதால், அனைவரையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Request to All Athenanakarthas to take initiative to educate the young generation, at least start where you are located. Be a example, and reach them.