கிளப்புறாங்கய்யா... உலகம்
மழைநீரில் குளியல்
சிதம்பரம் நகரில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய வீதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளூர்வாசி ஒருவர், உடலுக்கு சோப்பு போட்டு கொண்டு, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் உற்சாக குளியலில் ஈடுபட்டார். அவ்வழியாக, சென்ற ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது, இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சிவப்பு நிற பாண்டா
சிலி நாட்டின், மிருக காட்சி சாலை ஒன்றில் முதல் முறையாக சிவப்பு நிற பாண்டா கரடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து விடப்பட்டன. கொரோனா காரணமாக, இவை பத்திரமாக பாதுகாக்கப்பட்டதாக பூங்கா நிர்வாகி தெரிவித்தார். இந்நிலையில், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், சிவப்பு நிற கரடிகள் செய்யும் சுட்டித்தனங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
சமூக இடைவெளி முக்கியம்
கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். சாண்டாகிளாஸ்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா அச்சமின்றி குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாக்களோடு விளையாடி மகிழும் காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
கார் ஓட்டும் நாய்
பொதுவாக நாய்கள் நன்றியுள்ளவை, மட்டுமல்ல திறமையானவையும் கூட என்பதற்கு வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவே சிறந்த உதாரணம். ஒரு நாய் சிறிய ரக பொம்மை காரை சாலையில் ஓட்டி செல்கிறது. தொடர்ந்து, நாயின் உரிமையாளர்கள் அதன் பின்னால் நடந்து செல்ல, நாயும் பொறுமையாக காரை ஓட்டிச் செல்கிறது. இதை அவ்வழியாக சென்றவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் வியப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!