dinamalar telegram
Advertisement

பாக்., முன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் மரணம்

Share
Tamil News
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய முன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் 47, கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். இவர் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது 'அல் அஜீசியா' வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு ஏழு ஆண்டு தண்டனை வழங்கினார். ஆனால் லஞ்ச ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபை விடுதலை செய்தார்.

பின் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர் ஒருவரிடம் நெருக்கடி காரணமாக சிறைத் தண்டனை விதித்ததாக அர்ஷத் மாலிக் கூறிய 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அத்துடன் நவாஸ் ஷெரீபை நேரில் சந்தித்து சிறைத் தண்டனையை எதிர்த்து எந்த வகையில் மேல்முறையீடு செய்யலாம் என சொல்லிக் கொடுத்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையை எழுப்பியது.

அர்ஷத் மாலிக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க பாக். அரசு உத்தரவிட்டது. ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement