பயங்கரவாத தலைவர்களுக்கு பாக்.,கில் சிறை
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் மூன்று தலைவர்களுக்கு தலா 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகளின் பின்னணியில் செயல்படும் அமைப்பு ஜமாத் - உத் - தவா.இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயீத் 70, உள்ளார். இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக பாக். பஞ்சாப் மாகாண பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 41 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களான அப்துல் சலாம் பின் முகமது, ஜாபர் இக்பால், முகமது அஷ்ரப் மற்றும் ஹபீஸ் அப்துல் ரகுமான் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய இரு வழக்குகள் லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் சலாம் பின் முகமது, ஜாபர் இக்பால் மற்றும் முகமது அஷ்ரப் ஆகியோருக்கு தலா 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி இஜாஸ் அகமத் பட்டர் தீர்ப்பளித்தார்.ஹபீஸ் அப்துல் ரகுமானுக்கு இரு வழக்குகளில் தலா ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!