வாஷிங்டன் : கொரோனா பரவல் காரணமாக, கடுமையான பாதிப்புக்குள்ளான இந்தியாவின் பொருளாதாரம், தற்போதுபடிப்படியாக மீட்சியடைந்து வருவதாக, ஐ.எம்.எப்., எனும், பன்னாட்டு நிதியம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, நிதியத்தின் தலைமை பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் மிகக் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை கண்டுள்ளது, இந்தியா. இருப்பினும், தற்போது பொருளாதாரம், படிப்படியாக மீட்சி கண்டு வருகிறது.கடந்த இரண்டாவது காலாண்டில், அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிக மீட்சியை அந்நாடு கண்டுள்ளது.
இதற்கு, உற்பத்தி துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும், தேவைகள் அதிகரிப்பும் காரணமாக அமைந்தது.அடுத்து வரும் காலாண்டுகளிலும் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Yes, all my MF me good returns now, will invest more now, all my NRI fris are doing the same.