அருப்புக்கோட்டை: ஓய்வு காலத்தை மகிழ்ச்சியோடு குடும்பத்தோடு இருக்க பெரும்பாலானோர் விரும்புவர். வீட்டில் இருந்து கொண்டு 'டிவி'பார்த்து கொண்டும் தான் விரும்பிய இடங்களுக்கு சென்று வந்து பொழுதை கழிப்பர். ஆனால் ஓய்வு பெற்ற பின்னரும் பலருக்கு உத.வியாக இருக்க வேண்டும், பொழுதை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஒருசிலர்.
அந்தவகையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயச்சந்திரன் தன் ஓய்வு நாட்களை பயனுள்ளதாக கழிக்கிறார். இவர் பல ஆண்டுகளாக தினமலர் வாசகர். தினமலர் நாளிதழில் வெளி வரும் பயனுள்ள தகவல்களை ஆல்பமாக தயாரிப்பது இவரது வழக்கம்.
தற்போது கொரோனா காலத்தில் 'தினமலர்' நாளிதழில் வெளியான கொரோனா குறித்த செய்திகள் அனைத்தையும் சேகரித்து ஆல்பமாக தயாரித்து உள்ளார்.
ஜெயச்சந்திரன் கூறியதாவது; நான் தினமலர் நாளிதழின் தீவிர வாசகன். அனைத்து செய்திகளையும் பல தலைப்புகளில் ஏகப்பட்ட ஆல்பங்கள் தயாரித்துள்ளேன். இது அரசு போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. போட்டி தேர்வுகள் எழுதுபவர்களுக்கு தினமலர் ஆல்பத்திலிருந்து தேவையான குறிப்புகள் எடுத்து கொள்ளலாம்.
நான் தயாரித்துள்ள தினமலர் ஆல்பத்தில் உள்ள தவகல்களை தெரிந்து கொண்டாலே போட்டி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். தற்போது, தினமலர் நாளிதழில் வெளியான கொரோனா செய்திகளை 2 ஆல்பமாக தயாரித்து வைத்துள்ளேன் , என்றார். இவரை பாராட்ட 99657 61323 .

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
நல்ல முயற்சி. மனமார்ந்த பாராட்டுக்கள்..ஆனால் வாசகர்கள் இந்த செய்தியை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். யாரும் இதுபற்றி கருத்து எழுதவில்லை.