கோவை:-இதுவரை இல்லாத அளவுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களில், 315 பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.கடித்த இடத்தில் பிளேடால் கீறுவது, கயிற்றால் கட்டுப்போடுவது போன்ற தவறான முதலுதவி காரணமாக, இதில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாம்பு கடித்தால் நுரையீரல், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. எனவே, பாம்பு கடித்தால், ஆம்புலன்சுக்கு காத்திருக்காமல், கிடைக்கும் வாகனத்தில் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்,
கோவை அரசு மருத்துவமனையின் பொது மருத்துவ துறை தலைவர் சுவாமிநாதன்.அவர் கூறியதாவது:கோவை அரசு மருத்துவமனைக்கு, தினமும் 3ல் இருந்து 5 பேர் வரை, பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களில், 315 பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், ஆண்கள் 217; பெண்கள் 98 பேர். இவர்களில், 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கு தவறான முதலுவியும் காரணம். நிறைய பேர் சினிமாவை பார்த்து, பாம்பு கடித்தவுடன் அந்த இடத்தில் இறுக்கி கட்டுப்போடுவது, காயம் பட்ட இடத்தில், பிளேடால் கீறி விடுவது போன்ற செயல்களை செய்கின்றனர். இதுபோன்ற செயல்கள் நோயாளிகளை, மேலும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.காயம் பட்ட இடத்தில் இருந்து, சீரான இடைவெளியில் கட்டுப்போடாமல் விடும்போது, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. பாம்பு கடித்தால் பெரும்பாலும் ரத்தம் உறையும் திறன் இல்லாமல் போய்விடும். அந்த சமயத்தில் பிளேடால் கீறி விடுவது தவறு. பாம்பு கடித்தால் பயம், பதட்டம் கூடாது. பாம்பு கடித்தவுடன் ஓடக்கூடாது. கடிபட்ட இடத்தை அசைக்காமல் இருக்க வேண்டும். கடிபட்டதும், விரைந்து மருத்துவமனைக்கு சென்று விட்டாலே, உயிரை காப்பாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
எந்த பாம்புக்கு என்ன பாதிப்பு
பாம்பு வகைகளில் 30 வகையான பாம்புகள்தான், விஷத்தன்மை கொண்டவை. இதில், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகியவை கடித்தால் வீக்கம் ஏற்படும். தொடர்ந்து, நெறிக்கட்டி வீக்கமும் அதிகமாகி கொண்டே போகும். நாகம், கட்டுவிரியன் கடித்தால் கண்கள் செயல் இழந்து, இமைகள் மூடிக்கொள்ளும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நரம்பு மண்டலமும் பாதிக்கப்படக் கூடும்.
நான்கு மாதங்களில்'கடி' வாங்கியவர்கள்
ஆகஸ்ட் - 87செப்டம்பர் - 68அக்டோபர் - 89நவம்பர் - 71(23ம் தேதி வரை)மொத்தம் - 315அரசு மருத்துவமனையில்பாம்புக்கடிக்கு சிகிச்சைபாம்பு கடித்தவர்களுக்கு பெரும்பாலும், நுரையீரல் பாதிப்பு, ரத்தம் உறையாமல் இருப்பது, சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், விலை உயர்ந்த விஷமுறிவு மருந்துகள் அளிக்கப்படுவதால், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடிகறது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
பச்சைப்பாம்புக்கு விஷமில்லை என்று படித்திருக்கிறோம் பச்சைப்பாம்பு படத்தைப் போட்டு ஏன் பயமுறுத்துகிறீர்கள்.