இதன் காரணமாக, சாதாரண கிளை நிர்வாகிகள் முதல், அமைச்சர்கள் வரை, அனைவரும் அச்சத்துடன் இருந்தனர்.அமைச்சர்கள் அனைவரும், அதிருப்தியாளர்களை அரவணைத்தே சென்றனர். அவரது மறைவுக்கு பின், மாவட்டங்களில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் வைப்பது தான் சட்டமாக உள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக, கட்சி தலைமையால், எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.
நாற்காலி வீச்சு
இதன் காரணமாக, கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில், அமைச்சர்கள் முன்னிலையில், நாற்காலி வீச்சு சம்பவமும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினி, கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருப்பது, அதிருப்தியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டால், ரஜினி கட்சிக்கு தாவ, தயாராகி வருகின்றனர்.
ரஜினி கட்சிக்கு போய் விடுவோம் என்பதை வெளிப்படுத்தினாலே, அ.தி.மு.க., தலைமை அழைத்து பேசி, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையும், அவர்களுக்கு வந்துள்ளது.
அரவணைத்து செல்வர்
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சியை பொறுத்தவரை, முன்னாள் எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர், முக்கியத்துவம் தரப்படாததால் அதிருப்தியில் உள்ளனர். அதனால், ரஜினி கட்சிக்கு அவர்கள் தாவுவதை தடுக்க வேண்டிய நிலை, ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தனி ஆவர்த்தனம் செய்த அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தேசிய கட்சி இங்கு கால் பாதிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு, கிளையை துவக்கி, முதல் கட்டம்மாக இப்போதைய ஆளும் கட்சியை கரைத்து அதிலிருந்து பலரை கிளைக்கு மாற்றிவிட ஏற்பாடாகிவிட்டச்சு, அடிமைகள் இதன் விபரீதம் தெரிவதற்கு வாய்ப்பில்லை, திட்டமிட்டு இரண்டு அடிமைகளுக்கு பதவிகளில் பிரிவினை செய்து, ஒரு அடிமையை முழுவதும் வாங்கியாச்சு, மற்றொன்று தப்ப இயலாதவாறு வலை பின்னப்பட்டுவிட்டாச்சு, கிளையின் தலைவருக்கு சொகுசாக இருந்தாலே போதும் நாங்களே கிளையை நடத்தி கொள்கின்றோம். என்று நிர்வாகியையும் உதவிக்கு வழங்கி விட்டார்கள். சகுனி கதையை தமிழர்கள் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்கனவே திரு பெரியாரும், கலைங்கரும் வழங்கி விட்டார்கள்.