dinamalar telegram
Advertisement

பள்ளத்தில் சிக்கிய பஸ்சால் பரபரப்பு

Share
Tamil News
கே.கே.நகர்: கே.கே.நகரில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், பஸ் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில், பரவலாக பெய்து வரும் மழையை தாக்குப்பிடிக்க முடியாமல், சாலையில் 'மெகா' பள்ளங்கள் உருவாகி, பீதியை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில், கே.கே.நகர், காமராஜர் சாலையில், நேற்று ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் சிக்கியது. பஸ்சில், 10க்கும் குறைவான பயணியர் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இதையடுத்து, ஆலந்துார் பணிமனையில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர் கதை!கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி. ஆர்.நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும், முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக செல்லும், பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அவ்வப்போது, அண்ணா பிரதான சாலையில், பள்ளங்கள் ஏற்பட்டு பீதியை கிளப்புகின்றன.

சமீபத்தில், இங்கு இரு மெகா பள்ளங்கள் ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.மேலும், இப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் குடிநீர் குழாய்களிலும், கழிவுநீர் கலந்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement