dinamalar telegram
Advertisement

விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடாவுக்கு எச்சரிக்கை

Share
Tamil News
புதுடில்லி : டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், தேவையில்லாமல் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடா துாதருக்கு, வெளியுறவு அமைச்சகம், 'சம்மன்' அனுப்பியது.


'இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், இரு நாட்டு உறவு பாதிக்கப்படும்' என, அவரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மூன்றாவது முறையாக பேச்சு நடக்க உள்ளது.

ஆதரவு



இதற்கிடையில், சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள், வட அமெரிக்கா நாடான கனடாவில், சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், 'இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி, கவலை அளிக்கிறது.

'எங்களின் கவலையை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க, கனடா எப்போதும் துணை நிற்கும்' என்றார்..
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, கனடா அமைச்சர்கள் சிலரும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு, மத்திய அரசு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தது. 'உண்மை நிலவரம் தெரியாமல், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா துாதர் நதிர் படேலுக்கு, வெளியுறவு அமைச்சகம் நேற்று, 'சம்மன்' அனுப்பியது. வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில், கனடா துாதர் நதிர் படேல் ஆஜரானார். அவரிடம், விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கனடா பிரதமர் பேசியதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை



இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கனடா பிரதமர் தெரிவித்த கருத்துகள், ஏற்க முடியாதவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், மற்ற நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கனடாவில், இந்திய துாதரகம் முன், பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல், கனடா தலைவர்களும் பேசி வருகின்றனர். இதனால், துாதரக ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இந்திய துாதரக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு தலைவர்கள் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என, கனடா துாதரிடம் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8ம் தேதி 'பாரத் பந்த்'



மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும், 8ம் தேதி, 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் ஒன்றின் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறியதாவது:மூன்று வேளாண் சட்டங்களையும், மத்திய அரசு திரும்ப பெறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுதும், 8ம் தேதி, கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். அன்று, டில்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முடக்கி, மறியலில் ஈடுபடுவோம். நாடு முழுதும் விவசாயிகள், சுங்கச் சாவடிகளில் மறியலில் ஈடுபட்டு, எந்த வாகனமும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். சுங்க கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.

போராட்டத்தின் பின்னணி என்ன?



டில்லியில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கான பின்னணி பற்றி, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களால், நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயன் அடைகின்றனர்.மத்திய அரசின் சட்டங்களால், விவசாயிகளிடமிருந்து பொருட்களை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், ஏஜென்ட்களும் தான், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விவசாய உற்பத்தி மார்க்கெட் கமிட்டிக்கான மண்டிகளின் ஏஜென்ட்களுக்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுதும் உள்ள விவசாயிகளில், 6 சதவீதம் மட்டுமே உள்ள இந்த ஏஜென்ட்கள் தான், மத்திய அரசுக்கு எதிராக, விவசாயிகளை போராட துாண்டியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களாக உள்ளனர். தேர்தல்களில் அதிகம் செலவு செய்வதும் இவர்கள் தான்.தங்களின் வருமானம் பறிபோகிறது என்பதால்தான், விவசாயிகளை போராட துாண்டி, பின்னணியில் இருந்து ஆதரித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7 + 22)

  • karthikeyan - karur,இந்தியா

    கனடா பிரதமர் தன் நாட்டில் உள்ள நிறை குறைகளை பார்ப்பதுவே அவருக்கு அழகு ..........

  • Anand - chennai,இந்தியா

    அந்நாட்டு தூதுவனை உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுங்கள்..... உலகத்தில் உள்ள அணைத்து பிரிவினைவாத தொடர்புடைய கருங்காலிகளும் கனடா அல்லது இங்கிலாந்தில் தான் இருக்கிறார்கள். இவனெல்லாம் வாயே திறக்கக்கூடாது.

  • raguram - madurai,இந்தியா

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நைஜீரியாவில் 110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை செய்தவர்களிக்கு பாத பூஜை செய்வர் போல. எந்த கண்டமும் செல்ல கூட தைரியமில்லை.

  • Shroog - Mumbai ,இந்தியா

    Canada prime minister is a great person. BJP is waste party

    • skandh - Chennai,இந்தியா

      .மக்கள் பயனடைவது உங்களுக்கு பிடிக்கவில்லை. மக்கள் அமைதியாக இருந்தால், உங்கள் அரசியல் தொழில் பட்டுப்போகும்.அதனால்தான் நீங்கள் செய்யும் போராட்டம். விவசாயிகளுக்கும் , போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை.

  • blocked user - blocked,மயோட்

    அரசியல் கட்சி, தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் - பலர் மொத்தமாகச் சேர்ந்து விவசாயி போல நாடகம் போல போராட்டம் நடத்துகிறார்கள்.

Home உறவு பாதிக்கப்படும்: கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை (20)

  • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கனடா இஸ்லாமிய நாடுகளிலிருந்து குடியிறக்க சட்டத்தில் மதவாத, பிரிவினைவாதிகளை வரவழைத்து குடியமர்த்தி, தற்போது பிரான்ஸ் அனுபவிப்பது போல குண்டு வெடிப்பு சம்பவங்களை சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று உணர்வார்கள் , பிரிவினைவாதம் ,தீவிரவாதத்தினால் ஏற்படும் வலி என்ன என்பதனை.

  • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

    இவரும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை நம்பி நாட்டை அழிவு பாதைக்குள் இட்டு செல்லும் மற்றுமொரு கோமாளி மோடி ஆட்சியில் இந்துக்கள் விழித்துக்கொண்கொண்டு பப்புவை தூக்கி ஏறிந்ததுபோல் இவருக்கும் நடக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துமத விரோதி சுடலை கானையும் இந்துக்கள் தோற்கடிப்பார்கள்

  • Modikumar - West Mambalam,இந்தியா

    தமிழ் நாட்டுக்கு உளறுவாய் சுடலை மாதிரி கனடாவுக்கு இந்த ஜஸ்டின் ரூட்டோ, கனடாவில் வாழும் சீக்கியர்களின் அரசியல் ஒட்டு வங்கிக்காக சுடலை அண்ட் கோ மாதிரி ஓட்டுக்காக எதுல கிடந்தாலும் எடுத்து வாயிலவெச்சுக்கற ரகம் ராகம் தான் இந்த கனடா பிரதமர். சமயம் பாத்து தன் இந்திய வெளியுறவு துறை வேலையை கான்பிக்கும்.

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    Most of the Sikhs living abroad are Kalistan supporters. I have seen many portraits supporting Bindrenwalle in the Gurudhwaras. In our indepence day parades they ly fly balloons with Kalistani slogans.

  • Nachiar - toronto,கனடா

    உண்மையில் கனடாவில் சீக்கியரை விட இந்துக்கள் தொகை சிறிது அதிகம் அனால் எங்கும் போல் சமய பாரம்பரிய உணர்ச்சிகள் கொஞ்சம் கம்மி தான். என்று தான் விழிப்போமோ? ஜெய் ஹிந்

  • Ganesan Madurai -

    அருமையான நடவடிக்கை. பாராட்டுக்கள்.

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    கனடா ஒரு பெரிய நாடு. ஏகப்பட்ட வளம். சனத்தொகை மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் பாட்டுக்கு நிம்மதியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அனாவசியமாக உலக விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் நல்லது. காலிஸ்தான் வேண்டுமென்றால் கனடாவிலேயே ஒரு பிராந்தியத்தைக் கொடுத்து விடலாம். அவர்கள் அதை செய்யத் தயாராக இருக்கிறார்களா என்று பார்ப்போம். இன்னும் ஒரு இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு கனடாவில் வெள்ளைக்காரர்கள் சிறுபான்மையாகி விடுவார்கள். அப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். கருமம் எப்போதும் யாரையும் விடாது.

  • RajanRajan - kerala,இந்தியா

    CENTER, TO TRASH THE CANADIAN INTERFERENCE ON THE INTERNAL ISSUES OF OUR NATION.

  • kulandhai Kannan -

    இதே கனடாதான் WTOல் இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும் மான்யங்களை கடுமையாக எதிர்க்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் இரட்டை வேடம்தான்.

  • konanki - Chennai,இந்தியா

    எல்லாம் ஓட்டு வங்கி அரசியல். கனடாவில் 17-20 பாராளுமன்ற தொகுதிகளில் சீக்கியர் ஓட்டுகள்தான் வெற்றியை தீர்மானிக்கும். அதை குறி வைத்து கனடா பிரதமர் இந்த அறிவிப்பு. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் WTO கூட்டங்களில் இதே கனடா பிரதமர், "இந்தியா விவசாயிகளுக்கு உரம், மின்சாரம், அதிக விற்பன விலை போன்ற சலுகைகளை கொடுக்கிறது. அதனால் எங்கள் கனடாவில் விவசாயிகள் பாதிக்க படுகின்றனர்" என்று தொடர்ந்து குற்றம் சாட்டியது. அரசியல் வாதிகள் எல்லாம் ஓரே ரகம் தான்.

  • GMM - KA,இந்தியா

    நியாயமான கருத்தை எழுத்து மூலம் ஜனநாயக நாட்டில் தெரிவிக்க தெரியாமல் போராட்டம் மூலம் தன் பக்க தீர்விற்கு திணிப்பது கம்யூனிஸ்ட் பாணி. கனடா பொருள் புரியாமல் கடனுக்கு கூட ஆதரித்து தன் மதிப்பை கெடுத்து கொள்ள கூடாது. விவசாய சட்டத்தில் குறை என்ன? தீர்வு என்ன? யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லை. இந்தியா முழுவதும் ஆதார்/பான் உதவியுடன் திறந்த சந்தை. விவசாயிகள்/அரசுகள் வருவாய் ஈட்டும். நோய் பரவும் காலத்தில் போராட்டம் சரியா? முன் காலத்தில் விவசாயிகள் மண்ணை பொன் ஆக்கினார்கள். திராவிட விவசாயிகள் பல ஆண்டுகளாக நிலங்களை அபகரித்து / கைப்பற்றி, மண்ணை மலடாக்கி வருகிறார்கள்?

  • sankaseshan - mumbai,இந்தியா

    Canada was never frily with India. It is assylam of rebels from various countries. There are two provinces, French speaking and English speaking. England always support forces against India, France is more accomadative in Indian affairs .

  • சம்பத் குமார் -

    1).கனடா 2019ம் ஆண்டின் தேர்தலில் நமது பஞ்சாப் மாநிலத்தின் சகோதரர் திரு Jagmeet singh(new democratic party ) அவர்களின் கட்சி 24 சீட்டுகள் வெற்றி பெற்றது. 2015 தேர்தலை விட 15 சீட்டுகள் குறைவாக பெற்றார். கனாடாவில் நமது சீக்கிய நன்பர்களின் அதிகம் உள்ளனர். பெரும் வியாபாரிகள் மற்றும் வேலை செய்யும் நமது நிரந்தர குடியுரிமை பெற்ற சீக்கிய நன்பர்களின் ஓட்டு கனடாவின் தேர்தலை தீர்மானிக்கவல்லது.2). தற்போதைய பிரதமர் திரு justin Trudeau ( liberal party) 157 இடங்களில் வெற்றி பெற்றது. 3). திரு justin கடந்த 2015 தேர்தல் விட 20 சீட்டுகள் குறைவாக பெற்றார். 4) மொத்த சீட்டுகள் எண்ணிக்கை 338. 5). இரண்டாவது கட்சி திரு Andrew scheer(Conservative party) 121 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2015 தேர்தலை விட 26 சீட்டுகள் அதிகம்.6). ஆட்சி அமைக்க 170 சீட்டுகள் வேண்டும்.தேர்தலுக்கு பிறகு நமது பஞ்சாப் சகோதரர் திரு Jagmeet singh உடன் திரு justin Trudeau கூட்டணி வைத்து தற்பொழுது ஆட்சியில் நீடிக்கிறார்.இதன் மூலம் திரு justin அவர்களது செல்வாக்கு எவ்வாறு கனடாவில் கீழ் நோக்கி உள்ளது என்பது தெளிவாகிறது.மேலே சொல்ல வேறு ஒன்றும் இல்லை. நாமாக புரிந்து கொள்வோம். நன்றி.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    கனடா உலகின் மிகப்பெரிய அகதி முகாம். இலங்கை அகதிகள், சிரியா, லிபியா, குர்த், இஸ்லாமிய அகதிகள், ஆப்ரிக்க, செஷன்ய அகதிகள் வரை எந்த நாட்டு அகதிகளும் அங்கு செல்ல முடியும். ஒரு நாட்டுக்கு ஒரு கும்பல் பயங்கரவாதிகள் என்றால் இனொரு நாட்டுக்கு அதே கும்பல் புரட்சிக்காரர்கள். அந்த அடிப்படியில் கனடா அனுமதிக்கும். அதனால்தான் அருகிலேயே இருந்தாலும் அமேரிக்கா கனடாவுக்கு மரியாதை தருவதில்லை.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    எனக்கென்னமோ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்படி பேசியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அங்குள்ள மோடி எதிர்ப்பாளர்கள், முக்கியமாக மோடிக்கு எதிரான சீக்கியர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அப்படி பேசவைத்திருப்பார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

  • Krishnakumar - Nellore,இந்தியா

    எங்கள் நாட்டு விவகாரத்தை நங்கள் பார்த்துக்கொள்கிறோம்....தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அறுபட்டுக்கொள்ளவேண்டாம்.....ஜெய் ஹிந்த்

  • m.n.balasubramani - TIRUPUR,இந்தியா

    என்ன செய்ய அங்கும் அரசியல். சீக்கியர்கள் ஒட்டு வேண்டுமே, கடுமையாக எச்சரிக்கை விடவேண்டும்.

  • Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்

    காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவுக்கு ஆப்பு வைக்காமல் பார்த்து கொண்டால் சரி. இந்தியாவை பற்றி பேசும் வேலை அயல் நாட்டினருக்கு இல்லை.

    • KALAIMANI MUTHU - london,யுனைடெட் கிங்டம்

      Nice

Advertisement