dinamalar telegram
Advertisement

ரஜினி வியூகம்: தி.மு.க.,வில் கலக்கம்

Share
Tamil News
வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி களமிறங்கும் சூழல் உருவாகி உள்ளதால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற கலக்கம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் கட்சி துவங்கப் போவதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். வரும், 31ல், கட்சியின் பெயர், கொடி போன்ற விபரங்களை வெளியிடவும், அவர் தயாராகி வருகிறார்.'மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்; இப்போ இல்லேன்னா எப்போதும் இல்ல; தமிழகத்தின் தலையெழுத்தை மாத்துற நாள் வந்தாச்சு' என்பது உள்ளிட்ட, 'பஞ்ச்' வசனங்களுடன், ரஜினி, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளார்.


கட்சி துவக்கும் அறிவிப்பை, ரஜினி வெளியிட்டதும், அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் உற்சாகம் அடைந்துள்ளன.ஆனால், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி தலைமையில், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட, வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க., - தி.மு.க., - ரஜினி அணி என, மும்முனை போட்டி ஏற்படும் நிலை வரலாம்.
அப்போது, ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை, மொத்தமாக அறுவடை செய்யலாம் என்ற, தி.மு.க.,வின் திட்டம் பலிக்காமல் போகும். ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களில் ஒரு பங்கை, ரஜினி கைப்பற்றலாம்.

இதனால், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற அச்சம், அக்கட்சியில் நிலவுகிறது.
அதே நேரத்தில், தி.மு.க.,வில் ஓரம் கட்டப்பட்டவர்களும், ஒதுங்கியிருப்பவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினி கட்சியில் சேர, தூது விட்டு வருகின்றனர். இதுவும், தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, தெரிகிறது.இதுவரை, தி.மு.க.,வுக்கு ஓட்டு அளித்து வந்துள்ள ஹிந்துக்கள், ரஜினி கட்சிக்கு ஓட்டு போடும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.

தி.மு.க., வில் உள்ள, ரஜினி ரசிகர்களின் ஓட்டுக்களையும், அக்கட்சி இழக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.இதுபோன்ற காரணங்களால், ரஜினி வரவால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம், தி.மு.க.,வினரிடம் காணப்படுகிறது.

- நமது நிருபர் --
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (107)

 • சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா

  திமுகவின் பேரை சொல்லாமல் தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்தமுடியாது

 • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

  ரஜினி தமிழ்நாட்டுக்கு பொழைக்க வந்த ஆள். அவர் போல் நெறைய வருவார் , போவார். அவர் தனி மனிதன். தி.மு.கா. ஒரு கொள்கை, சித்தாந்தம். தமிழர் முன்னேற்றம் என்ற காரணங்களால் உருவாக்கப்பட்டது. ஆகா இந்த கட்சி தமிழ்நாட்டில் ஜாதிகள், ப்ராஹ்மணர்கள் உள்ளவரை இருக்கும். இது நான் யாரையம் புண்படுத்த சொல்லவில்லை.

 • Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்

  அணைத்து மாநில கட்சிகளுக்கும் ஒருவித பயத்தை ஏற்படுத்திவிட்டார் மாண்புமிகு திரு ரஜினி அவர்கள், இதுதான் அவரது முதல் வெற்றி.

 • ravi - chennai,இந்தியா

  Stalin is becoming the permanent contestant for CM and he will never become CM and he should never dream for it.

 • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

  அடுத்த முதல்வர் கமல் தான். துணை முதல்வர் சீமான்.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   பித்தம் தலைக்கு ஏறி வானளாவி இருக்கும் கருத்து...

  • Sathya Dhara - chennai,இந்தியா

   இதுவரை, தி.மு.க.,வுக்கு ஓட்டு அளித்து வந்துள்ள ஹிந்துக்கள்.....மனிதர்களே அல்ல.....கால்நடைகளை விட......சீசீ எழுதவே காய் கூசுகிறது. திமுகவின் எந்த லக்ஷணத்தை பார்த்துவிட்டு வாக்கு அளிக்கிறார்கள்.

Advertisement