dinamalar telegram
Advertisement

விடாக்கண்டன் கான்ட்ராக்டர்; கொடாக்கண்டன் எம்.எல்.ஏ.,

Share
Tamil News
விடாக்கண்டன் கான்ட்ராக்டர்; கொடாக்கண்டன் எம்.எல்.ஏ.,


''பால் உற்பத்தியாளர் சங்கங்களை பழிவாங்குறதா புலம்புறாங்க...'' என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆவின் ஒன்றியங்கள்ல, ஆளுங்கட்சியினர் தான் சேர்மன்களா இருக்காங்க... இந்த சூழல்ல, ஆயிரக்கணக்கான பால் உறபத்தியாளர் சங்கங்களுக்கு பதிவேடுகள் வாங்குனதுல முறைகேடு நடந்துட்டதா, சிலர் நீதிமன்றத்துல கேஸ் போட்டுட்டாங்க... இதன் பின்னணியில, சேர்மன்கள் இருக்கிறதா, ஆவின் அதிகாரிகள் சந்தேகப்
படுறாங்க...
''அதனால, இதுவரைக்கும் பால் காசை, சங்கங்கள் வழியா உறுப்பினர்களுக்கு குடுத்துட்டு இருந்ததை, இனிமே, உறுப்பினர் வங்கி கணக்குல வரவு வைக்கப்படும்னு உத்தரவு போட்டுட்டாங்க... 'பதிவேடுகள் விவகாரத்தை, நீதிமன்றம் வரை கொண்டு போன சங்கங்களை பழிவாங்க தான், இப்படி பண்றாங்க'ன்னு, பால் உற்பத்தியாளர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மதுரை மாவட்ட வேட்பாளர் பட்டியல், 'லீக்' ஆயிடுத்து ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை மாவட்டத்துல இருக்கற, 10 சட்ட சபை தொகுதிகள்ல, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு நாலு தொகுதிகள் தரப் போறாளாம்... மீத இடங்கள்ல, தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்த போறா ஓய்...
''இதுல, மதுரை கிழக்கு - மூர்த்தி, மதுரை மத்தி - பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு - டாக்டர் சரவணன், சோழவந்தான் - தமிழரசி, திருப்பரங்குன்றம் - தளபதி, திருமங்கலம் - மணிமாறன், மதுரை தெற்கு - ம.தி.மு.க., மதுரை மேற்கு - மார்க்சிஸ்ட், மேலுார் - காங்கிரஸ், உசிலம்பட்டி - பார்வர்டு பிளாக்னு ஒதுக்க முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
உடனே, ''விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நாமக்கல் மாவட்டத்துல, ஒரு கான்ட்ராக்டர், 2.50 கோடி ரூபாய் டெண்டரை, தனக்கு கேட்டு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,விடம் பல லட்சம் ரூபாயை அட்வான்சா குடுத்திருந்தாரு... ஆனா, வேற ஒருத்தருக்கு டெண்டர் போயிட்டு வே...''அப்ப, வாங்குன பணத்தை திருப்பி குடுத்துரணுமுல்லா... ஆனா, யானை வாயில போன கரும்பும், அரசியல்வாதிகள் பைக்கு போன பணமும் திரும்ப வருமா வே...
''எம்.எல்.ஏ., வீட்டுக்கு நடையா நடந்து, கான்ட்ராக்டர் கால் தேய்ஞ்சது தான் மிச்சம்... சமீபத்துல, அதிகாலை, 6:00 மணிக்கே, எம்.எல்.ஏ., வீட்டுக்கு கான்ட்ராக்டர் போயிருக்காரு வே...
''ஆனா, எம்.எல்.ஏ., வீட்டின் பின்பக்கத்துல இருக்கிற கார் ஷெட் வழியா, வெளியில போயிட்டாரு... கான்ட்ராக்டரும் விடாக்கண்டன் தான்...
''மறுநாள், முன்பக்கமா வீட்டு கதவை தட்டிட்டு, பின்பக்கமா நழுவ பார்த்த, எம்.எல்.ஏ.,வை கப்புன்னு பிடிச்சுட்டாரு வே... பணம் கேட்டப்ப, காரசாரமா விவாதம் செஞ்ச எம்.எல்.ஏ., ஒரு கட்டத்துல, 'எஸ்.பி., மட்டுமல்ல, முதல்வரிடம் கூட புகார்
செய்... பணத்தை தர முடியாது'ன்னு முகத்துல அடிச்சாப்புல சொல்லிட்டு போயிட்டாரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''சந்திரசேகரன் வந்தா, எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க பா...'' என நாயரிடம் கூறியபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கன்டராக்டர் பார்ப்பார், அவருக்கும் குண்டர்கள் இருப்பார்கள், கடத்தி வைத்தோ, தாக்கியோ வசூல் பண்ண ஏற்பாடு செய்வார். இப்படி சேர்த்த பணம் எந்த ஆஸ்பத்திரிக்கு, எத்தனை காலம் கப்பம் கட்ட போகப்போகிறதோ ?

Advertisement