இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: வீட்டிலேயே இருந்தபடி, அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல், ஊழல் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். அவருக்கு தினந்தோறும் அறிக்கை விடுவது மட்டுமே வாடிக்கை. அவருக்கு அறிக்கை நாயகன் என்றுபட்டமே தரலாம்.
'டவுட்' தனபாலு: ஸ்டாலின் அறிக்கை விட்ட பிறகு தான், பல விவகாரங்களில், தமிழக அரசு சுதாரித்து கொண்டுள்ளது. எனவே, அவருக்கு, 'அறிக்கை நாயகன்' பட்டம் தந்தால், தமிழக அரசுக்கு, 'சுதாரிப்பு அரசு' என, பட்டம் கிடைக்குமோ என்பது தான், இப்போதைய, 'டவுட்!'
தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி: நடிகர் ரஜினியின் அரசியல் வருகை, தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்காது. எங்களுக்கு ஓட்டு விழுவதில் எந்த குழப்பமும் இருக்காது. எனினும், ரஜினி, 'லேட்டா' வந்திருக்காரா, 'லேட்டஸ்டா' வந்திருக்கிறாரா என்பது, வரும் தேர்தலில் தெரியும்.
'டவுட்' தனபாலு: அவர் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும், தி.மு.க., வட்டாரங்கள் நேற்று முன்தினம் கலக்கம் அடைந்தது என்பதில், 'டவுட்'டே இருக்க முடியாது. ஏனெனில், இல்லாத, பொல்லாத விஷயங்களை கூறி, இ.பி.எஸ்., அரசை அகற்றி, ஆட்சியில் அமர்ந்து விடலாம் என, தி.மு.க., கணக்கு போட்டிருந்த நிலையில், அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதே!
பத்திரிகை செய்தி: தமிழக பா.ஜ., அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர், அர்ஜுனமூர்த்தி. தற்போது, ரஜினி துவங்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக, கட்சி தலைமைக்கு கடிதம் கொடுத்திருந்தார்; அதை, பா.ஜ., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.
'டவுட்' தனபாலு: பா.ஜ.,வில் பொறுப்பில் இருந்தவர், ரஜினி கூட சேர்ந்துள்ளதால், ரஜினி கட்சியின் கொள்கையும், பா.ஜ.,வை ஒத்திருக்குமோ; சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ரஜினி கட்சி கூட்டணி அமையுமோ; அந்த கூட்டணியில், அ.தி.மு.க., தலைவர்கள் இணைந்து, புதுவித அரசை, தமிழகத்தில் அமைப்பரோ என்பன போன்ற, 'டவுட்'டுகள் ஏற்படுகின்றன!

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
அர்ஜுனமூர்த்தி யா, அரிச்சந்திர மூர்த்தியா, வீர அபிமன்யுவா என்பது போகபோகத்தான் தெரியும்..