பெ.நா.பாளையம்;ஆனைகட்டி வட்டாரத்தில் வசிக்கும் பழங்குடியினர், ரேஷன் கடைக்கு ஆறு கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளதால், அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, மொபைல் ரேஷன் கடை (அம்மா நகரும் நியாய விலைக்கடை) அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி வட்டாரத்தில், பழங்குடியினர் வசிக்கும், 18 கிராமங்கள் உள்ளன. இவர்களுக்காக, ஆனைகட்டி, ஆலமரமேடு ஆகிய பகுதிகளில், மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பாக, இரண்டு பொது வினியோக கடைகள் இயங்குகின்றன. இக்கடைகளில் பொருட்கள் வாங்க, பழங்குடியினர், சுமார், 5 கி.மீ., தொலைவில் உள்ள தங்களுடைய கிராமங்களில் இருந்து செல்ல வேண்டியுள்ளது. வனவிலங்குகளின் தொந்தரவு இருப்பதால், மாலையில் பொருட்களை வாங்க வரும் நபர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்தது. பிரச்னைக்கு தீர்வு காண, 'அம்மா நகரும் ரேஷன் கடை'யை அறிமுகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான உத்தரவு வெளியிட்டுள்ளது.
எந்தெந்த நாள்அதில், கூறியிருப்பதாவது:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சி, ஆனைகட்டி வட்டாரத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக இயங்கும் இரண்டு ரேஷன் கடைகளில், பொது வினியோக பொருட்கள், சீரான முறையில் வழங்க இயலாத நிலையில் இயங்குவதாகவும், இரண்டு கடைகளையும், கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக ஏற்று நடத்த ஆவண செய்யுமாறு கோரியுள்ளனர்.கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அறிக்கையில், 'வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில், தட்ஷணா, சின்னஜம்புகண்டி நியாய விலைக்கடைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது; இவ்விரு நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள், ஐந்து முதல் ஆறு கி.மீ., துாரம் போதிய போக்குவரத்து வசதியின்றி வந்து பொருட்களை வாங்கி செல்ல சிரமப்படுகின்றனர்' என குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் சிரமத்தை போக்க, அம்மா நகரும் ரேஷன் கடை, துாவைப்பதி கிராமத்தில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது புதன்கிழமையும், சேம்புக்கரை கிராமத்தில், இரண்டாவது மற்றும் நான்காவது திங்கள்கிழமையும், கொண்டனுார்புதுார் கிராமத்தில், இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்கிழமையும் இயங்கும் என, அறிவிக்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள், அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என, அறிவிக்கப்படுகிறது.
ரத்து
கடைகள் செயல்பட வேண்டிய நாள், அரசு விடுமுறை தினமாக இருந்தால், அடுத்த வேலைநாளில் செயல்பட வேண்டும். கடைகள் செயல்படும் இடத்தில், பெயர் பலகை, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள், செயல்படும் நேரம் உட்பட விபரங்கள் வைக்கப்பட வேண்டும். இங்கு செயல்படும் நாளில், பொருட்கள் பெற இயலாத நிலையில், குடும்ப அட்டைதாரர்கள், பின்னாளில், தாய் கடையில் பொருட்கள் பெற்று செல்லலாம். மேலும், தட்ஷணா, சின்னஜம்புகண்டி மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ரத்து செய்து, மேற்படி கடைகளை, நஞ்சுண்டாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திடம் ஒப்படைத்து, ஆனைகட்டி- துாவைப்பதி, ஆலமரமேடு- சேம்புக்கரை, கொண்டனுார்புதுார் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையை இயக்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரம், பணம் மிச்சமாகும்
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி கூறியதாவது:தற்போது இயங்கும் ரேஷன் கடையில் இருந்து, ஐந்து முதல் ஆறு கி.மீ., துாரத்தில் வசிக்கும் பழங்குடியினர், மாதந்தோறும் பெறும், 35 கிலோ இலவச அரிசியை, ஆட்டோ உட்பட வேறு வாகனங்கள் வாயிலாக, 150 முதல், 200 ரூபாய் கொடுத்து எடுத்து செல்கின்றனர். அம்மா நகரும் ரேஷன் கடை வாயிலாக, இனி அந்தந்த கிராமங்களுக்கு நேரிடையாக வந்து பொருட்கள் வழங்கப்படும். இதனால், மலைவாழ் மக்களுக்கு நேரமும், பணமும் மிச்சம். மேலும், தற்போது இவ்விரு கடைகளையும் கூட்டுறவு சங்கம் ஏற்பதால், மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும், சீரான இடைவெளியில், தொய்வின்றி கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!