உடல் உறுப்புகள் தானம் அமைச்சர் வேண்டுகோள்
புதுக்கோட்டை: ''அனைவரும் உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு, நிலங்களை வழங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டு விழா, நேற்று, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடந்தது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிலம் வழங்கியவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கி பேசியதாவது:உடல் உறுப்பு தானம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்காக, தமிழக அரசு, தொடர்ந்து, ஆறாவது முறையாக, மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளது.மனிதர்களுக்கு இறப்பு, எப்போது வேண்டுமானாலும் வரலாம். அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும். என் உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளேன்.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேறாது என பலர் கூறி வருகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். திட்டமிட்டபடி, ஜனவரி மாதம், ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, முதல்வர் தலைமையில் நடைபெறும். இவ்வாறு, அவர் பேசினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!