dinamalar telegram
Advertisement

இஸ்லாம் என்பது மதம் இல்லையா?

Share
Tamil News

இஸ்லாம் என்பது மதம் இல்லையா?'கோவையில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' மாநில தலைவர், முகமது ஷேக் அன்சாரி, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மதவாத சிந்தனையுடன், பிரித்தாளும் சூழ்ச்சியை, பா.ஜ., கையாளுகிறது. தற்போது, தமிழகத்திலும் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியே வேல் யாத்திரை. மதவாத சக்திகளை தோற்கடிக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசியல் கட்சியினர், இஸ்லாமியருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி, போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர், 'மதவாத சக்திகளை தோற்கடிக்கணும் என்கிறார்... அப்படின்னா, இஸ்லாம் என்பது மதம் இல்லையா... அது, கடவுள் மறுப்பு கொள்கை உடையதா?' எனக் கேட்டார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'நம் திராவிட அரசியல்வாதிகள் அப்படித் தான் சொல்லுறாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

'சட்டத்தை மீறலாமா?'கோவை, சிவானந்தா காலனியில், பா.ஜ., சார்பில், 'வேல் யாத்திரை' பொதுக்கூட்டம், சமீபத்தில் நடந்தது.இதில், பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில், 'கந்த சஷ்டி கவசத்தையும், தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியோருக்கு, தக்க பாடம் புகட்டப்படும். மற்ற மதப் பண்டிகைக்கு, அரசு விடுமுறை விடப்படுவது போல, தைப்பூச விழாவுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'கொரோனா காலத்துல, இந்த பொதுக்கூட்டம் தேவையா... ஆளுங்கட்சியே, சட்டத்தை மீறலாமா...' எனக் கேட்டதும், அருகிலிருந்த இளம் நிருபர், 'அரசியல்வாதிகளிடம் மட்டும், சட்டம் செல்லுபடியாகாது...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

'இப்பவே... கண்ணை கட்டுதே!'திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்., - கம்யூ., உள்ளிட்ட கட்சியினர், மறியல் போராட்டம் நடத்தினர்.புதிய பஸ் நிலையம் அருகே போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், கம்யூ., கட்சியைச் சேர்ந்த பலர், அங்கு கூடினர். அதே போராட்டத்தில் பங்கேற்க வந்த, அங்கன்வாடி ஊழியர்கள், அவிநாசி தபால் நிலையம் முன் கூடினர்.இதனால், எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களை, பஸ் நிலையத்திற்கு வரச் சொல்லினர். அவர்களோ, 'நீங்கள் இங்கே வாருங்கள்' என்றனர்.வாக்குவாதத்திற்கு பின், அரசியல் கட்சியினர் வேறு வழியின்றி, தபால் நிலையத்திற்கு வந்து, மறியலில் பங்கேற்றனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், 'ஒரு சின்ன போராட்டத்திற்கே, இந்த பாடு படுறாங்களே... தேர்தல் நேரத்தில், என்னவெல்லாம் நடக்குமோ... இப்பவே, கண்ணை கட்டுதே' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இஸ்லாம் மற்ற மதத்தவர்களை காபிர் என்று அல்லவா சொல்கிறது. இஸ்லாமை தவிர வேறு மதங்கள் உலகில் இருக்க கூடாது என்பதும் அல்லவே அவர்கள் சித்தாந்தம். இவர்கள் ஜனநாயகம், மதவாதம் என்று எல்லாம் பேசுவது வேடிக்கை.

  • Darmavan - Chennai,இந்தியா

    முஸ்லீம் தன் மதம் பற்றி பேசினால் மத வாதம் இல்லை.ஹிந்து பேசினால் மதவாதம்,அதென்ன மத ரீதியில் ஒதுக்கீடு .ஹிந்துக்களை பிரிக்கவில்லை என்றால் இவர்கள் அதை அழித்துவிடுவான்கள். பிஜேபி அதை தடுக்கிறது.

Advertisement