மதுரை: குற்றங்களை தடுக்க ரவுடிகளை டிஜிபி திரிபாதி போலீசாருக்கு சுட உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபகாலமாக குற்றங்களை தடுக்க செல்லும் இடங்களிலும், ரவுடிகளை பிடிக்க முயலும்போதும் அவர்களால் பாதிக்கப் படுகின்றனர்.
ஆக.,18ல் துாத்துக்குடி மணக்கரையில் ரவுடிகள் குண்டு வீசியதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் பலியானார். இதுபோன்று சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இதைதொடர்ந்து மதுரை நகரில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்து செல்லும் போது ரவுடிகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு உத்தரவிட்டார்
. நேற்று 14 டூவீலரில் தலா இரு போலீசார் ரோந்து செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது: ரவுடிகளின் நடவடிக்கை குறித்து தகவல் கிடைத்தவுடன் தாமதமின்றி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத சமயத்தில் பாதுகாப்பாக துப்பாக்கியை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் தற்போது 67 ரோந்து வாகனங்கள் உள்ளன என்றார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
பாராட்டுக்கள். புறப்படட்டும் படை .ரௌடிகள் அழியட்டும். ஆனந்தமாக இருக்கு. மனித உரிமை என்ற போர்வையில் வருபவர்களையும் போட்டுத் தள்ளுங்கள்.