போலீஸ் டைரி
விபத்துகளில் இருவர் பலிமப்பேடு: மப்பேடு அடுத்த, கொண்டஞ்சேரியைச் சேர்ந்த மோகன் மனைவி பார்வதி, 55. கடந்த, 21ம் தேதி, மகன் ஜெயகுமாருடன், 'புல்லட்' இருசக்கர வாகனத்தில், பேரம்பாக்கம் சென்றார்.பேரம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, நிலை தடுமாறிய வாகனம் விழுந்தது. இதில், தலையில் படுகாயமடைந்த பார்வதி, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, நேற்று முன்தினம் இறந்தார்.திருத்தணி: திருத்தணி, மாம்பாக்கசத்திரத்தைச் சேர்ந்த கிருபாநாகராஜ் மகன் வெங்கடேசன், 36, டிப்பர் லாரி ஓட்டுனர்.நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார். கன்னிகாபுரம் - மாம்பாக்கசத்திரம் மாநில நெடுஞ்சாலையில், வாகனத்தின் முன்சக்கர டயர், திடீரென வெடித்தது.இதில், நிலைதடுமாறி வாகனம், சாலை விழுந்ததால், வெங்கடேசன், தலையில் பலத்த காயமடைந்தார். திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் இறந்தார்.கஞ்சா பறிமுதல்திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார், ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக, 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தினர்.போலீசாரை பார்த்து, காக்களூர் அம்பேத்கர், சூரியா இருவரும், வாகனம் விட்டு தப்பினர். போலீசார், வாகனத்தில் இருந்த, 1.125 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!