வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு மீட்பு
திருத்தணி : நகராட்சியில், ஒரு வீட்டிற்குள் புகுந்த ஆறரை அடி நீளமுள்ள சாரை பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திருத்தணி நகராட்சி, அரக்கோணம் சாலையில் ரயில்வே குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இக்குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டில், நேற்று மதியம், திடீரென, ஆறரை அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று, புகுந்தது. பாம்பை கண்டதும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர்.தகவல் அறிந்ததும், திருத்தணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணி நேரம் போராடி, சாரை பாம்பை உயிருடன் மீட்டனர். அதை தொடர்ந்து, திருத்தணி அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் விட்டனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!