திருத்தணி நெடுஞ்சாலையில் பழக்கடைகள் அகற்றம்
திருத்தணி : நகராட்சியில் உள்ள மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்த பழக்கடைகளை போலீசார் அகற்றி, தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருத்தணி நகராட்சியில் உள்ள திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை, கமலா தியேட்டர் அருகே சாலையை ஆக்கிரமித்து, 10 பேர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார், மாநில நெடுஞ்சாலையில் இருந்த பழக்கடைகளை நேற்று அதிரடியாக அகற்றினர்.
மேலும், மாநில நெடுஞ்சாலை இருக்கும் இடம் வரை, கயிறு வைத்து அளவீடு செய்து தடுப்பு வேலி அமைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி மாநில நெடுஞ்சாலை, துறையினரும், அங்கு சாலையை அகலப்படுத்தி, தார்ச்சாலை அமைப்பதற்கும், உறுதி அளித்துள்ளனர். 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தை, நேற்று, மீட்கப்பட்டது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!