dinamalar telegram
Advertisement

இந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு

Share
புதுடில்லி : சமூகவலைதளமான டுவிட்டரில் 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' என்ற பெயரில் #joinhinduecosystem என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.

சினிமா மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து இந்து கடவுள்கள், அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமான காட்சிகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அதிலும் தணிக்கை இல்லாத வெப்சீரிஸ்களில் இந்த காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. சமீபத்தில் கூட ஒரு வெப்சீரிஸில் கோவிலில் வைத்து ஹீரோ, ஹீரோயின் முத்தமிட்ட காட்சி இடம் பெற்று சர்ச்சையானதுடன், அந்த வெப்சீரிஸ் குழு மீது வழக்கும் பதிவானது. மேலும் மறைமுகமாக லவ்-ஜிகாத் பிரச்சாரமும் அதிகமாகி வருகிறது. சினிமா தவிர்த்து பொதுவாக சிலரும், இந்துக்கள் எதிரான கருத்துக்களை பதிவிட்ட வருகின்றனர். இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும், இந்துக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அவ்வப்போது சமூகவலைதளங்களில் குரல்கள் எழும்.




இந்நிலையில் பா.ஜ.,வின் கபில் மிஸ்ரா கடந்தவாரம், joinhinduecosystem என்ற விஷயத்தை முன் எடுத்து வைத்தார். ஆன்லைன் மூலம் இதில் இணையவேண்டும். இதில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி சில கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை தேர்வு செய்து தங்களை உறுப்பினராக்கி கொள்ளலாம். இந்துக்கள் ஒன்று திரளும் ஆன்லைன் அழைப்பு, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு ஒலிக்க தொடங்கி உள்ளது.

இந்துக்கள் பலரும் இதில் தங்களை உறுப்பினராக்கி கொண்டு, தான் இதில் இணைந்துவிட்டதாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நாம் எதற்காக ஒன்று திரள வேண்டும் என தங்களது கருத்துக்களை சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக இதில் தாங்கள் இணைந்ததற்கான காரணமாக இந்து மதம் மற்றும் அவற்றின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமான விஷயங்கள் அரங்கேறுவது, லவ்-ஜிகாத் போன்ற விஷயங்களை குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் இன்று டுவிட்டரில் #joinhinduecosystem என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (64)

  • nizamudin - trichy,இந்தியா

    இந்தியர்களே ஒன்று சேருங்கள்

    • mathimandhiri - chennai,இந்தியா

      இந்தியர்களே, அதுவும் யாருக்காகவோ உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து இந்தியர்களே, தனிச் சலுகை எதுவும் அற்ற இந்தியர்களே கட்டாயம் ஒன்று படுங்கள். இல்லையேல் எதிர்காலம் உங்களுக்கு இல்லை. வேறு யாருக்கோ.

  • Ramasamy - Chennai,இந்தியா

    என் கருத்துக்கள் அரசியல் மற்றும் மதம் தாண்டியவை. "இந்து மதம்" - இதை மதமென்று பார்க்காதீர்கள். இதை ஒரு "வாழும் முறை" என்று எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல் என்ற பெயரிலும் மதம் என்ற பெயரிலும் இதிலுள்ள மிக மிக நல்ல விஷயங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. அதை காப்பாற்ற வேண்டியது அவசியம் . இந்த joinhinduecotem அதற்கு உதவுமானால் வரவேற்போம். அப்படி இல்லாமல் இது இன்னொரு அரசியல் விஷயமாக இருக்கும் பட்சத்தில் அதை ignore செய்வோம்.

  • Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா

    சாதி வேறு பாடுகள் இல்லை என்ற நிலை வரும் வரை இந்துக்கள் ஒற்றுமை என்பது வெறும் வெட்டிப் பேச்சாகத்தான் இருக்கும். இது கீழ்மட்டம் வரை பரவ வேண்டும். ஒதுக்கி வைக்கப்பட்ட இந்துக்கள் மற்ற மதத்திற்கு மாறுவது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

  • J BASKARAN - Tamilnadu,Chennai,இந்தியா

    ஒற்றுமை வேண்டும், சிறந்த ஆரம்பம். நல்ல மாற்றத்தை ஏர் படுத்தும். நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே நடக்கும்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    உண்மைதான். 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' உங்களை எதிர்த்த, எதிர்க்கும் கட்சிக்கு வோட்டு போடாதீர்கள்.

Advertisement