‛விவசாயி என் கடவுள்: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சோனு சூட் ‛டுவீட்
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் ஹரியானா - டில்லி மாநில எல்லைப் பகுதியில் ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஹரியானா அரசு எல்லைகளை மூடியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.

வாசகர் கருத்து (11)
கடவுள் விவசாயிதான். ஆனா பாதிரிகள், இமாம்கள் மாதிரி இடைத்தரகர்கள் கோடிகளை குவித்துக்கொண்டு விவவாயியை கேவலப்படுத்துகிறார்கள் என்பது சோனுவுக்கு புரிந்தால் சரி. உடனே பூசாரி பத்தி கேப்பாங்க..ஹிந்து மதத்தை பின்பற்றுபவன் கோவிலுக்கு செல்லவில்லை, சாமி கூப்பிடவில்லை, அர்ச்சகர் தட்டில் காசு போடவில்லையென்றாலும் ஹிந்துதான். பூசாரிகள் எங்களுக்கு முக்கியமில்லை.
என் ஆதரவும் விவசாயிகளுக்குத்தான். அனால் இந்த விவசாயிகள் உண்மை தெரியாமல் திண்டாடுகின்றனரே சோனு சூடு இவர்களுக்கு உண்மையை புரியவைக்கலாம் இல்லையா? தியேட்டரில் கத்தியுடன் ஆபரேஷன் செய்யவந்த டாக்டரை கொல்லவந்தார் என்று எப்படி சொல்ல முடியும்?
சோனு கண்ணா நீ நல்லவன், ஆகையால் உனக்கு அரசியல் புரியவில்லை மத்திய அரசின் விவசாயிகள் நல சட்டத்தை விரும்பாத, பா.ஜ.க அல்லாத, முக்கியமாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், அந்த சட்டத்தை நீர்த்து போகும் விதமாக, காங்கிரஸ் தலைமையகம் வழிகாட்டுதல் வரைவு மசோதா மாதிரி, Model Draft Bill, பிரகாரம், தங்கள் மாநிலத்தில் சட்டம் இயற்றி விட்டன. இதுவரை பஞ்சாப், ராஜஸ்தான், மே.வங்கம், மஹாராஷ்டிரா போன்ற 9 மாநிலங்களில் இந்த சட்டம் இயற்றப்பட்டு விட்டது இருப்பினும் இந்த போராட்டம் ஏன்? அதுதான் அரசியல். பிகாரில் காங்கிரஸ் ஜெயித்து இருந்தால் இந்தப் போராட்டம் வந்து இருக்குமா? வந்து இருக்காது. ஆகவே நீ இன்னும் சமர்த்து பையனாகவே இரு இதை கண்டுக்காம விடு
விவசாயிங்க கடவுள் தான். ஆனால் நீ அந்த தரகர் கூட்டத்தை சேர்ந்தவன் போல் இருக்கு.
எம்ப்டன் படத்துல சுடுகாட்டுக்கு வர்ற வடிவேலு காமடி மாதிரி இருக்கு. இது இடைத்தரகர்கள் போராட்டம்ன்னு தெரியாம இருக்காரு. உண்மையான விவசாயிகள் நிலத்துல பயிர்பண்ணிக்கொண்டிருக்காங்க.