dinamalar telegram
Advertisement

யு.ஏ.இ., தேசிய தினத்தை முன்னிட்டு 472 கைதிகள் விடுதலை

Share
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யு.ஏ.இ) தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்படவிருக்கும் கைதிகள் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் என்று எமிரேட்ஸின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் (WAM) கூறியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் 628 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆட்சியாளர்களும் கைதிகளுக்கு விடுதலை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement